அதிரடி ஒப்பனிங் பேட்ஸ்மேனான இவருக்கு ஒருநாள் போட்டியில் ஆவது வாய்ப்பு கொடுக்க இந்திய ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு ;

0

இந்திய கிரிக்கெட் அணியில் இப்பொழுது ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை அள்ளிக்கொடுத்து வருகிறது இந்திய. இப்பொழுதெல்லாம் ஐபிஎல் டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு நிச்சியமாக இந்திய அணியில் ஏதாவது ஒரு போட்டியில் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளது.

ஆனால், இப்பொழுது இருக்கும் நிலைமையை பார்த்தால் யார் யார் ப்ளேயிங் 11ல் இடம்பெற போகிறார்கள் என்று பல கேள்விகள் எழுந்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார் ஷிகர் தவான். இந்திய அணியின் முக்கியமான ஓப்பனிங் பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற உலகக்கோப்பை 2021 போட்டிகளில் ஷிகர் தவான் இடம்பெறாதது பலருக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. ஒருவேளை ஷிகர் தவான் இடம்பெற்றிருந்தால் வெற்றியை இந்திய அணி கைபற்றிருக்க அதிக வாய்ப்புகள் இருந்திருக்கும் என்று பலர் கூறினார்கள்.

கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சிறப்பாக விளையாடி வருகிறார் ஷிகர். ஆனால் டி-20 போட்டிகளில் விளையாட அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படவே இல்லை. ஏனென்றால் ஐபிஎல் 2022யில் பெரிய அளவில் பேட்டிங் செய்யவில்லை.

அதனால் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியிலும், அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியிலும், சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் ஷிகர் தவானுக்கு மட்டும் வாய்ப்புகள் கிடைக்காமல் திணறிக்கொண்டு வருகிறார்…!

ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் களமிறங்க போகிறார் ஷிகர் தவான். அதுமட்டுமின்றி, இப்பொழுது இந்திய அணியில் இருக்கும் ரோஹித் ஷர்மாவுக்கு ஒருநாள் போட்டியில் பார்ட்னெர்ஷிப் செய்ய போகும் கே.எல்.ராகுலுக்கு காயம் காரணமாக அவர் இந்த தொடரில் இடம்பெறவில்லை.

அதனால் இப்பொழுது இருக்கும் ஒரே வழி ஷிகர் தவான் மட்டும் தான். ஷிகர் தவான் இதுவரை 149 ஒருநாள் போட்டியில் விளையாடி 6,284 ரன்களை அடித்துள்ளார். அதில் 17 சதம் மற்றும் 34 அரைசதம் அடித்துள்ளார். ஒரு போட்டிக்கு 45 ரன்கள் என்று விகிதத்தில் விளையாடி வருகிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் போன்ற இருவரும் சிறப்பாக பார்ட்னெர்ஷிப் செய்வார்களா ? இல்லையா ? இந்திய அணிக்கு தொடக்க ஆட்டம் அமையுமா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்…!

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here