வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆவது இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா ? ராகுல் டிராவிட் என்ன செய்ய போகிறார் ?? வாய்ப்புக்காக ஏங்கும் இளம் வீரர் இவர் தான் ;

வருகின்ற 6ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள். அகமதாபாத்-ல் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் மூன்று ஒருநாள் போட்டிகளும், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் டி-20 போட்டிகளும் நடைபெற உள்ளனர்.

நேற்று முன்தினம் தான் இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை அறிமுகம் செய்தது பிசிசிஐ. அதில் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…!

இந்நிலையில் ஒரே ஒரு இளம் வீரர் மட்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தும், ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்காமல் திணறிக்கொண்டு வருகிறார் இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட். ஆமாம் ..! கடந்த ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டியில் ஆரம்பித்தது இவருடைய அதிரடியான ஆட்டம்.

கடந்த ஆண்டும் ஐபிஎல் 2021யில் 635 ரன்களை அடித்து அதிக ரன்களை அடித்த பெருமையும் அதற்கான விருதையும் பெற்றார் ருதுராஜ் கெய்க்வாட். பின்னர், இந்தியாவில் நடைபெறும் சையத் முஸ்தாக் அலி கோப்பையிலும் அடித்து தொம்சம் செய்துள்ளார் ருதுராஜ்.

சரி டி-20 போட்டியில் மட்டும் தான் ரன்களை அடிப்பார் என்று பலரும் நினைத்து கொண்டு இருந்த நேரத்தில் தொடங்கியது ஒருநாள் போட்டிக்கான விஜய் ஹசாரே கோப்பை. அதில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக களமிறங்கிய தொடர்ந்து விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று சதம் அடித்து தொம்சம் செய்தார்.

கடந்த ஆண்டு அதிக ரன்களை அடித்த ஒரே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தான், அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆமாம்..! என்ன தான் அதிக ரன்களை அடித்தாலும், ருதுராஜ் கெய்க்வாட்-க்கு கடந்த ஆண்டு இறுதியில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டிக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.

அப்பொழுது கேப்டனான ரோஹித் சர்மா இவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. பின்னர் இப்பொழுது நடந்து முடிந்த தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது. ஆனால் ப்ளேயிங் 11ல் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

கே.எல்.ராகுல் தான் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார். ஆனால் கே.எல்.ராகுல் ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். அதனை புரிந்து கொள்ளாமல் தொடக்க வீரராக களமிறங்கி சொல்லும் அளவிற்கு ரன்களை அடிக்கவில்லை.

அதற்கு ருதுராஜ் மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் செய்திருந்தால் நிச்சியமாக இந்திய அணி ஏதாவது ஒரு போட்டியில் ஆவது வெற்றி பெற்றிருக்கலாம். எப்பொழுதும் இளம் வீரர்களை பற்றி யோசித்து கொண்டு இருக்கும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ருதுராஜ் கெய்க்வாட் விஷயத்தில் சற்று யோசிக்காமல் இருக்கிறாரோ ?

அதிக ரன்களை அடித்தும், அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தும் இந்திய அணியில் வாய்ப்பு இல்லையா ?? ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம்கிடைக்காமல் போனதற்கு என்ன காரணமாக இருக்கும் ?