ஆகஸ்ட் 8ஆம் தேதி தோனி ரசிகர்களால் மறக்க முடியாத நாள்…! அந்த நாளில் அப்படி என்ன இருக்கிறது தெரியுமா ??

தோனி : கடந்த ஆண்டு 2020 செப்டம்பர் மாதத்தில் அவரது ஓய்வை அறிவித்தார் மகேந்திர சிங் தோனி. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கினார். ஆனால் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதை பற்றி இன்னும் அவர் முடிவு எடுக்கவில்லை.

அதனால் தோனி ரசிகர்கள் அவரவர் மனதை சமாதானம் செய்து கொண்டுள்ளனர். கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய அணியில் ஒரு பேட்ஸ்மேன் ஆக அறிமுகம் ஆனார். பின்னர் விக்கெட் கீப்பராக மாறி, 2007ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக மாறினார்.

ஏன் ஆகஸ்ட் 8ஆம் தேதி மறக்க முடியாத நாள் தெறியுமா?

2007ஆம் ஆண்டு தோனி இந்திய அணியின் கேப்டனாக பதவியேற்றார். இந்த நாள் நிச்சயமாக தோனி ரசிகர்களால் மறக்க முடியாத நாள் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல, தோனி இந்திய அணியை தலைமை தாங்கி அனைத்து ஐசிசி கோப்பைகளை பெற்று கொடுத்துள்ளார்.

தோனி அவரது கிரிக்கெட் விளையாட்டில், 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4876 ரன்களையும், 350 ஒருநாள் போட்டியில் 10773 ரன்களையும், 98 டி-20 போட்டிகளில் 1617 ரன்களையும் அடித்துள்ளார். அதேபோல, ஐபிஎல் போட்டி அறிமுகம் ஆன 2008ஆம் ஆண்டு முதல் இப்பொழுதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தலைமை தாங்கி வருகிறார் தோனி.

இதுவரை மூன்று முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளது சென்னை சூப்பர் கின்ஸ் அணி. மகேந்திர சிங் தோனி ஒரு வீரர் மட்டுமின்றி, இளம் வீரர்களுக்கு முன்னோடியா இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. பல கிரிக்கெட் வீரர்கள் இன்னும் தோனி எப்படி இந்த மாதிரி விளையாடுகிறார் என்று கூறி வருகின்றனர்.

தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ள ஐபிஎல் 2021 போட்டிகள் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ஐபிஎல் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். இந்த முறை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்லுமா? இல்லையா? என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.