இந்திய அணிக்கு ஆபத்தாக மாறிய ஆஸ்திரேலியா வீரர் ; விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் திணறும் இந்திய…!

0

நான்காவது டெஸ்ட் : இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று காலை 9:30 மணியளவில் தொடங்கியுள்ளது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் செய்ய போவதாக முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கி அதிக ரன்களை அடிக்க முயற்சி செய்து வருகிறது ஆஸ்திரேலியா.

இந்திய அணியின் பவுலர்கள் திணறல் :

ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷமி போன்ற முன்னணி பவுலர்கள் இந்திய அணியில் இருந்து விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் இந்திய அணி திணறுகிறது. இதுவரை நடந்து முடிந்த 50 ஓவர் முடிவில் வெறும் 2 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளனர்.

அதுமட்டுமின்றி 128 ரன்களையும் அடித்துள்ளது ஆஸ்திரேலியா. இதில் குறிப்பாக ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் இந்திய கிரிக்கெட் திணறுகிறது.

56* அரைசதம் அடித்த கவாஜா சிறப்பாக விளையாடி வருகிறார். ஒருவேளை அவரது விக்கெட்டை கைப்பற்ற தவறினால் நிச்சியமாக இந்திய அணிக்கு ஆபத்தாக அமைய அதிக வாய்ப்புகள் இருக்கிறது. என்ன செய்ய போகிறது இந்திய ?

நடந்து முடிந்த போட்டியின் சுருக்கம் :

Source: Twitter

இதுவரை நடந்து முடிந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளது. இருந்தாலும் மூன்றாவது போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, இன்று தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வென்றால் மட்டுமே ஆஸ்திரேலியா அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியால் வெல்ல முடியுமா ?

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here