HomeTrending Newsபங்களாதேஷ் கனவை தவுடுபிடி செய்த இலங்கை அணி ; சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது...

பங்களாதேஷ் கனவை தவுடுபிடி செய்த இலங்கை அணி ; சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இலங்கை அணி ; போட்டியின் விவரம் இதோ ;

நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சாகிப் தலைமையிலான பங்களாதேஷ் அணியும், ஷனாக தலைமையிலான இலங்கை அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கியது பங்களாதேஷ் அணி.

தொடக்க ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென்றால் அனைத்து வீரர்களும் முடிந்தவரை ரன்களை அடித்து விளாசினார்கள். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 183 ரன்களை அடித்தனர். அதில் அதிகபட்சமாக மிராஸ் 38, ஷாகிப் 24, ஹூசைன் 39, மஹ்முதுல்லா 27, மோசடடெக் ஹூசைன் 24 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கியது இலங்கை அணி. தொடக்க வீரர்களான நிஸ்ஸங்க மற்றும் மெண்டிஸ் ஆகிய இருவரும் இணைந்து 80 ரன்களை அடித்தனர். அதனால் இலங்கை அணிக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் மிடில் ஓர்டரில் ஒருவர் பின் ஒருவராக விக்கெட்டை இழந்து கொண்டே இருந்தனர்.

அப்பொழுது இலங்கை கேப்டனான ஷனாக விளையாடிய அதிரடியான ஆட்டத்தால் இலங்கை அணிக்கு ரன்கள் சேர்ந்தன. பின்பு இறுதி நேரத்தில் 30 ரன்கள் தேவை என்ற நிலையில் அதிரடியாக விளையாடி கொண்டு இருந்த கேப்டன் ஷனாக ஆட்டம் இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் பெர்னாண்டோ, கருணாரட்னே இறுதி நேரத்தில் சிறப்பாக விளையாடி இலங்கை அணியை வெற்றி பெற வைத்துள்ளனர். இறுதி ஓவர் வரை போராடிய இலங்கை அணி 8 விக்கெட்டை இழந்த நிலையில் 184 ரன்களை அடித்தனர். அதனால் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இலங்கை.

அதில் அதிகபட்சமாக நிஸ்ஸங்க 20, மெண்டிஸ் 60, குணாதிலக 11, தாசன் ஷனாக 45, கருணாரட்னே 16, பெர்னாண்டோ 10 ரன்களை அடித்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த போட்டி இலங்கை அணிக்கு மட்டுமின்றி பங்களாதேஷ் அணிக்கும் முக்கியமான போட்டியாகும். ஏனென்றால் குரூப் ‘பி’ பிரிவில் இருந்து மொத்தம் 2 அணிகள் மட்டும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெரும். அதில் ஆப்கானிஸ்தான் அணி முன்பே தேர்வாகியுள்ளது. அதனால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாகும்.

அதில் இலங்கை அணி வென்று பங்களாதேஷ் கனவை தவுடுபிடி செய்துள்ளது. குரூப் ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img