விராட்கோலியுடன் ஏற்பட்ட மோதலுக்கு பதிலளித்துள்ளார் இங்கிலாந்து வீரர் பரிஸ்டோவ் ; என்ன சொன்னார் தெரியுமா ?

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஜூலை 1 ஆம் தேதி மதியம் 3 மணியளவில் பர்மிங்கம் மைதானத்தில் நடைபெற தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையாமல் போனது, அது மட்டுமின்றி மழை வந்த காரணத்தால் பேட்டிங் செய்ய மிகவும் கடினமான சூழல் உருவானது.

அதனால் முதல் 5 விக்கெட்டை இழந்த இந்திய அணி 98 ரன்களை மட்டுமே அடித்திருந்தது. அதனால் இந்திய கிரிக்கெட் அணி அதிகபட்சமாக 200 ரன்களை தான அடிக்கும் என்று பலர் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் ஆல் – ரவுண்டர் ஆகிய இருவரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய கிரிக்கெட் அணிக்கு ரன்கள் குவிந்தன.

முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 416 ரன்களை அடித்துள்ளனர். பின்பு முதல் இன்னிங்ஸ்-ல் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. அதுமட்டுமின்றி பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாத காரணத்தால் ஒருவர் பின் ஒருவராக ஆட்டம் இழந்தனர்.

இருப்பினும் பரிஸ்டோவ் அடித்த சதம் மட்டும் தான் இங்கிலாந்து அணிக்கு ஆறுதலாக மாறியது. அதனால் 10 விக்கெட்டை இழந்த நிலையில் 284 ரன்களை மட்டுமே அடித்தனர். அதில் பரிஸ்டோவ் மட்டுமே அதிகபட்சமாக 106 ரன்களை அடித்தார். இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது இன்னிங்ஸ்-ல் விளையாடி வருகிறது.

இதுவரை 25 ஓவர் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி 3 விக்கெட்டை இழந்த நிலையில் 125 ரன்களை அடித்துள்ளது. இங்கிலாந்து அணி மாடுகள் இன்னிங்ஸ்-ல் பேட்டிங் செய்து கொண்டு இருந்த நேரத்தில், விராட்கோலி மற்றும் பரிஸ்டோவ் ஆகிய இருவருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதனை குறித்து இங்கிலாந்து வீரர் பரிஸ்டோவ்-விடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விராட்கோலி சண்டையில் உங்களுக்குள் இருந்த மிருகத்தை எழுப்பிவிட்டாரா ? அதற்கு பதிலளித்த பரிஸ்டோவ்; “அதுவும் நன்றாக தான் இருந்தது…!”

“நீங்க நினைக்கின்ற மாதிரி எங்களுக்குள் எதுவும் இல்லை. நாங்கள் இருவரும் எதிர் அணியில் 10 ஆண்டுகளாக விளையாடி வருகிறோம். அதனால் நிச்சியமாக நாங்கள் இருவரும் ஒன்றாக உணவு சாப்பிடுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று கூறியுள்ளார் பரிஸ்டோவ்.”