Advertisement
HomeTrending Newsஇவர் தான் பும்ராவிற்கு மாற்று வீரர் ; பிசிசிஐ எடுத்த அதிரடியான முடிவு ; இந்திய...

இவர் தான் பும்ராவிற்கு மாற்று வீரர் ; பிசிசிஐ எடுத்த அதிரடியான முடிவு ; இந்திய அணிக்கு பலமாக இருப்பாரா ?

டி-20 உலகக்கோப்பை : இந்த ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் அனைத்து விதமான உலக கிரிக்கெட் அணியும் அவரவர் அணிகளை அறிவித்து வருகின்றனர்.

இந்திய அணியின் அறிவிப்பு:

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது பிசிசிஐ. அதில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, றிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், அக்சர் பட்டேல், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல் மற்றும் அர்ஷதீப் சிங் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பும்ரா விலகல்:

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் பும்ரா காயம் காரணமாக வெளியேறியதால் ஆசிய கோப்பை போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

அதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக தான் இருந்தது. இருப்பினும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியதால் உலகக்கோப்பை போட்டியிலும் விளையாடுவார் என்று பலர் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் விளையாட பயிற்சி செய்து கொண்டு இருந்த நேரத்தில் பும்ராவிற்கு காயம் ஏற்பட்டது.

அதனால் தென்னாபிரிக்கா அணியில் இருந்து வெளியேறினார். இன்னும் 2 டி-20 போட்டிகள் மீதமுள்ளது நிலையில் பும்ராவிற்கு மாற்று வீரர் யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளது.அதனை அடுத்து டி-20 உலகக்கோப்பை போட்டியிலும் பும்ராவால் விளையாட முடியாது என்று பிசிசிஐ உறுதியான தகவலை வெளியிட்டது. பின்பு பும்ரா ஒரு முக்கியமான இந்திய வீரர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதனால் அவருக்கு பதிலாக சரியான மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது இந்திய.

மாற்று வீரர் அறிவிப்பு:

யாரும் எதிர்பார்க்காத வகையில் முகமத் சிராஜ் தான் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் பும்ராவிற்கு மாற்று வீரராக அறிவித்துள்ளது பிசிசிஐ. அப்போ டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் பும்ராவிற்கு பதிலாக யார் இடம்பெற வேண்டும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள். என்ன காரணம் என்பதையும் மறக்காமல் COMMENTS பண்ணுங்க,,!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular