HomeTrending NewsBCCI வெளியிட்ட ஆசிய கோப்பையில் பட்டைய கிளப்ப போகும் இந்திய அணி இதுதான் ; செம...

BCCI வெளியிட்ட ஆசிய கோப்பையில் பட்டைய கிளப்ப போகும் இந்திய அணி இதுதான் ; செம டீம் தான் ;

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி-20 போட்டிக்கான தொடரில் விளையாடி வந்தனர். அதில் ஒருநாள் போட்டியில் 3 – 0 என்ற கணக்கிலும், டி-20 போட்டியில் 4 – 1 என்ற கணக்கிலும் முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்றியுள்ளது.

Indian Team

அதனை தொடர்ந்து வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் ஜிம்பாபே அணிகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது. இது முடிந்தவுடன் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பைக்கான போட்டிகள் வருகின்ற 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் மொத்தம் 6 அணிகளை கொண்டு விளையாட உள்ளனர். இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து அணிகள் உறுதியான நிலையில், ஐக்கிய அரபு, குவைத், ஹாங் காங் மற்றும் சிங்கப்பூர் போன்ற அணிகளுள் ஒரு அணிதான் தேர்வாகும். அதுமட்டுமின்றி,கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் ஆசிய கோப்பை போட்டிக்கான அணியை அறிவித்த நிலையில் இந்திய மட்டும் இன்னும் 15 பேர் கொண்ட அணியின் விவரத்தை தெரிவிக்கவில்லை.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று பிசிசிஐ ஆசிய கோப்பைக்கான போட்டியில் களமிறங்க போகும் இந்திய அணியின் விவரத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்திய அணியின் விவரம் :

பேட்ஸ்மேன் : ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட்கோலி, சூரியகுமார் யாதவ்,

விக்கெட் கீப்பர் ; ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக்,

ஆல் – ரவுண்டர் : தீபக் ஹூடா, ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா,

பவுலர்: ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், ரவி பிஷானி, புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங் மற்றும் அவேஷ் கான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img