ஜிம்பாபே அணிக்கு எதிரான தொடரிலும் இவர் இல்லையாம் ; நேரடியாக உலகக்கோப்பை மற்றும் ஆசிய போட்டியில் இடம்பெற போகிறார் ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த ஒருநாள் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி 3 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில் டி-20 போட்டியிலும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

ஆமாம், நேற்று முன்தினம் நடந்த முதல் டி-20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியுள்ளது. அதனால் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் நடைபெற உள்ளது.

அதனை சமீபத்தில் தான் பிசிசிஐ உறுதியாக தகவலை வெளியிட்டுள்ளனர். அதனை தொடர்ந்து ஆசிய மற்றும் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளதால், முக்கியமான வீரர்களை வைத்து தான் இனிவரும் போட்டிகளில் இந்திய அணி விளையாட போகின்றனர்.

விராட்கோலி-யின் மோசமான விளையாட்டு:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த விராட்கோலி சமீப காலமாக சரியாக விளையாடுவது இல்லை. உண்மையை சொல்ல போனால் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியாக 70வது சதம் அடித்தார் விராட்கோலி. அதன்பிறகு இதுவரை மூன்று ஆண்டுகளாக சதம் அடிக்கமுடியாமல் தவித்து வருகிறார் விராட்கோலி.

இந்த நிலையில் விராட்கோலி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஓய்வு பெற்றது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் உலககோப்பை போட்டிக்கு முன்பு நிச்சியமாக ஜிம்பாபே போட்டிக்கான இந்தியா அணியில் விராட்கோலி விளையாடிய பிறகு தான் உலகக்கோப்பை போட்டியில் விளையாட போகிறார் என்று பிசிசிஐ தேர்வாளர்கள் கூறினார்கள்.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. சமீபத்தில் தான் ஜிம்பாபே அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை சமீபத்தில் தான் வெளியிட்டது பிசிசிஐ. அதில் விராட்கோலி இடம்பெறாதது அதிர்ச்சியாக உள்ளது. போர்மில் இல்லாத விராட்கோலி எப்படி நேரடியாக ஆசிய கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் டி-20 போட்டிகளில் விராட்கோலியின் பங்களிப்பு முக்கியமான ஒன்றாக இருக்குமா ??

ஜிம்பாபே அணிக்கு எதிரான இந்திய அணியின் விவரம் :

இதில் ரோஹித் சர்மா, பும்ரா, போன்ற வீரர்களுக்கு ஓய்வில்லை கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தான் ஜிம்பாபே அணியை எதிர்கொள்ள போகின்றனர். அதில் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபதி, இஷான் கிஷான்,சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்டுல் தாகூர், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், அவேஷ் கான், பிரஷித் கிருஷ்ணா, முகமத் சிராஜ், தீபக் சஹார் இடம்பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here