HomeTrending Newsவிராட்கோலி உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவதற்கு முன்பு இதை செய்ய வேண்டும் ; பிசிசிஐ தேர்வாளர்கள் உறுதி...

விராட்கோலி உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவதற்கு முன்பு இதை செய்ய வேண்டும் ; பிசிசிஐ தேர்வாளர்கள் உறுதி ;

இந்திய கிரிக்கெட் அணி :

இந்திய கிரிக்கெரட் அணி மாதம் தவறாமல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இரு தினங்களுக்கு தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய அணி தான் டி-20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான தொடரை கைப்பற்றியுள்ளனர்.

அதனை தொடர்ந்து ஒருவாரம் கூட இடைவெளி இல்லாத சமையத்தில் நாளை மறுநாள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடரில் விளையாட போகின்றனர். அதில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரான் விளையாட உள்ளனர்.

விராட்கோலியின் மோசமான நிலைமை :

2008ஆம் இந்திய அணியில் அறிமுகம் ஆன விராட்கோலி பெரிய அளவில் பேட்டிங் செய்யவில்லை என்றாலும், அடுத்த சில ஆண்டுகளில் அதிரடியாக விளையாடி பல சதம் அடித்துள்ளார். அதில் இதுவரை 70 சதம் அடித்த விராட்கோலி, இன்னும் 31 சதம் அடித்தால் சாதனையை படைக்க முடியும்.

ஆனால் இப்பொழுது விராட்கோலியின் பேட்டிங் மிகவும் மோசமான நிலையில் இருப்பது தான் உண்மை. விராட்கோலி இறுதியாக 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அடித்த சதத்திற்கு பிறகு சதம் அடிக்க முடியாமல் திணறிக்கொண்டு வருகிறார் விராட்கோலி.

சமீபத்தில் நடந்த முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விராட்கோலியின் பேட்டிங் பெரிய அளவில் இல்லாத காரணத்தால் பெரிய சர்ச்சை எழுந்தது. பல முன்னாள் வீரர்கள் விராட்கோலி அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும், அவரது வாய்ப்பு அவ்வளவு தான் என்று கூறியுள்ளனர்.

இதையும் படியுங்க : விராட்கோலி இடத்தில் இவர் இருந்திருந்தால் நிச்சயமாக அணியில் இருந்து வெளியேற்றி இருப்பார்கள் ; முன்னாள் வீரர் உறுதி ;

இதற்கிடையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் விராட்கோலிக்கு ஓய்வு கொடுத்தது பேசும் பொருளாக மாறியுள்ளது தான் உண்மை. ஆமாம், சமீப காலமாக சரியாக விளையாட வீரருக்கு தான் அதிக போட்டிகளில் விளையாட வாய்ப்புகளை கொடுத்து கம்பேக் கொடுக்க வைக்க வேண்டும். ஆனால் ஓய்வு கொடுப்பது எந்த அளவிற்கு அது சரியாக இருக்கும் ?

இதற்கு தான் இந்திய அணியின் தேர்வாளர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் ; “ஜிம்பாபே அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியில் விராட்கோலி விளையாடி அவரது போர்மை மீண்டும்கொண்டு வர வேண்டும். அப்பொழுது தான் ஆசியா மற்றும் டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட சரியாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.”

கம்பேக் கொடுப்பாரா ? விராட்கோலி ? கடந்த ஆண்டு தான் உலகக்கோப்பை போட்டிகளில் மிகவும் மோசமான நிலையில் இருந்தது இந்திய. ஆனால் இந்த முறை எப்படியாவது வெள்ள வேண்டும் என்று பல முயற்சிகளை செய்து வருகிறது இந்திய. அதில் விராட்கோலியின் பங்களிப்பு இருக்குமா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img