இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஏப்ரல் மாதத்தில் 9ஆம் தேதி ஆரம்பித்த ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் மே 30வரை நடைபெறும் என்ற அட்டவணையை வெளியிட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக ஐபிஎல் 2021 டி-20 லீக் பொடியை ஒத்திவைத்துள்ளனர். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
ஏன் ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு?
இந்தியாவில் அதிக கொரோனா இரண்டாம் அலை மிகவும் மோசமாக பரவி வருகிறது. அதனால் இந்தியாவில் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் வேண்டாம் என்று பல எதிர்ப்புகள் வந்தனர். இருந்தாலும் பல கட்டுப்பாடுகளை கொண்டு ஐபிஎல் 2021 போட்டிகள் இந்தியாவில் பாதுகாப்பு வளையத்துக்குள் வெறும் 6 மைதானத்தில் மட்டும் போட்டியை நடத்த வேண்டும் என்று பிசிசிஐ முடிவு செய்தது.
அதன்படி சிறப்பான முறையில் முதல் 29 போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால் தீடிரென்று ஐபிஎல் அணி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)அணியின் வீரர்களுக்கு சில பேரு உடம்பு சரில்லாமல் போனதால், எல்லாருக்கும் பயம் ஆகிவிட்டது. அதன்பிறகு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பட்டது.
அப்பொழுது தமிழக வீரரான வருண் சக்கரவத்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் அனைத்து அணி வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை என்பது மேற்கொள்ள பட்டது. அதில் சென்னை அணியில் 4 வருக்கும், கொல்கத்தா அணியில் 2 பெருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் தல ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதனால் உடனடியாக ஐபிஎல் போட்டியை நிறுத்தி , ஐபிஎல் 2021யின் மீதமுள்ள 31 போட்டிகளை தள்ளிவைத்துள்ளனர். அந்த போட்டிகள் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்க படுகிறது.
BCCI – யின் திட்டம்..! வெளியானது..! IPL எங்கு, எப்பொழுது நடக்கும் ? முழு விவரம் இதோ..!
சமீபத்தில் பிசிசிஐ அளித்த பேட்டியில், கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகளை நிறுத்தி வைத்துள்ளோம். இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் நடக்கபோகின்ற டி-20 உலகக்கோப்பை போட்டிகளுக்கு பிறகு ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளனர்.
ஏனென்றால், இப்பொழுது தான் வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் அவரவர் நாட்டுக்கு சென்றுள்ளனர். அதனால் அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு வரவழைத்து போட்டியை நடத்துவது மிகவும் கடினம் என்று பிசிசிஐ அதிரடியாக கூறியுள்ளது.
அதனால் இதற்கு ஒரேவழி டி-20 உலகக்கோப்பைக்காக வீரர்கள் அனைவரும் நிச்சியமாக ஒன்று கூடுவார்கள். அப்பொழுது உலகோப்பைக்கு பிறகு நிச்சியமாக ஐபிஎல் 2021, மீதமுள்ள போட்டிகள் நடைபெறும் என்று உறுதியாக கூறியுள்ளது. ஒருவேளை அப்பொழுதும் இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்தால் நிச்சியமாக ஐக்கிய அரபு நாட்டில் நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளது பிசிசிஐ.