விராட்கோலி-க்காக இதை செய்ய ஒப்புக்கொண்ட பிசிசிஐ ; ஆச்சரியமாக தான் இருக்கிறது ; ரசிகர்கள் சந்தோசம்..!

தல தோனிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியை சிறப்பாக வழிநடத்தி விளையாடி வந்ததற்கு முக்கியமான காரணம் விராட்கோலி தான். இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் டாப் இடத்தில் இடத்தை கைப்பற்றியதற்கு முக்கியமான காரணம் விராட்கோலி தான்.

ஆனால் கடந்த ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை டி-20 2021 போட்டிக்கு பிறகு நான் டி-20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக அவரே அறிவித்தார். அதன்படி ரோஹித் சர்மா டி-20 கேப்டனாக நியமனம் ஆனார். பின்னர் விராட்கோலியை ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக்கியது இந்திய.

பின்னர் வெறும் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக மட்டுமே விளையாடி வந்தார் விராட்கோலி. ஆனால் அதிலும் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. ஆமாம், தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் சரியாக விளையாடாத இந்திய அணி 1 – 2 என்ற கணக்கில் தொடரை கைவிட்டது.

இத்துடன் டெஸ்ட் போட்டிக்கானகேப்டன் பதவியில் இருந்தும் விராட்கோலி விலகினார். இதுவரை விராட்கோலி தலைமையிலான இந்தியா கிரிக்கெட் அணி இதுவரை எந்த ஐசிசி உலகக்கோப்பை போட்டிகளிலும் கோப்பையை வென்றதில்லை. இதனை மனதில் வைத்துக்கொண்டு தான் பிசிசிஐ நடவடிக்கை எடுத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் தான் இலங்கை அணிக்கு எதிரான மூன்று டி-20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் 3 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கை அணியை வாஷ் அவுட் செய்துள்ளது. நாளை மறுநாள் முதல் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான தொடர் நடைபெற உள்ளது.

அதுவும் முதல் போட்டி மொஹாலி-யில் உள்ள மைதானத்தில் நடைபெற போவதாக தகவல் வெளியானது. கடந்த பல ஆண்டுகளாக விராட்கோலி ஐபிஎல் டி-20 லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடி வருகிறார். அதுவும் நாளை மறுநாள் நடைபெற உள்ள போட்டி விராட்கோலியின் 100வது டெஸ்ட் போட்டியாகும்.

அதனால் விராட்கோலிக்காக என்ன செய்ய போகிறது பிசிசிஐ என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மொஹாலியில் நடைபெற போகின்ற முதல் டெஸ்ட் போட்டியில் 50 சதவீதம் மக்களை மட்டும் பார்க்க அனுமதி அளிக்க போவதாக பிசிசிஐ கூறியுள்ளது.

கொரோனா தொற்று அதிகம் உள்ளதால் தான் இந்த முடிவை பிசிசிஐ கையில் எடுத்திருக்கும் என்று பல கருத்துக்களை வெளியாகியுள்ளது. விராட்கோலி-க்கு மரியாதையை கொடுக்கும் விதமாக இந்த முடிவை கையில் எடுத்துள்ளது பிசிசிஐ. விராட்கோலிக்காக இப்படி செய்தது சரியா ?? தவறா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்…!