சிஎஸ்கே ப்ராவோ செய்த செயலால் தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இப்படி ஒரு ஆல் – ரவுண்டர் கிடைத்துள்ளார் : அப்படி என்ன செய்தார் தெரியுமா ?

ஐபிஎல் 2021: கிரிக்கெட் ரசிகர்களோ ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2021 கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் சிறப்பான முறையில் ஆரம்பித்து நடைபெற்று வந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் போட்டிகளை ரத்து செய்தது பிசிசிஐ.

யாருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது ?

மே 4ஆம் தேதி ஆண்டு விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஈயின் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத இருந்தன. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சில வீரர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.

உடனடியாக பிசிசிஐ, அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில் வருண் சக்ரவத்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டனர். பின்பு ஒரு சந்தேகத்தின் அடிப்படையில் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மூன்று வீரர்களுக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 2 பேருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் தலா ஒரு வீரருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட உடனையும் மீதமுள்ள போட்டிகளை ரத்து செய்தது பிசிசிஐ.

மீதமுள்ள போட்டிகள் எப்பொழுது எங்க நடைபெறும் ?

சமீபத்தில் பிசிசிஐ – கங்குலி அளித்த பேட்டியில் மீதமுள்ள போட்டிகள் நிச்சியமாக இந்தியாவில் நடைபெறாது என்றும், நேரம் சரியாக அமைந்தால் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் -ரவுண்டர் ஆன ப்ராவோ செய்த செயலால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இப்படி ஒரு வீரர் கிடைத்துள்ளார் ;

ஐபிஎல் போட்டிகளில் அதிக போட்டிகளில் வெற்றியை கைப்பற்றிய அணிகளுள் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இடம்பெறும். அதுமட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்கள் எப்படி இந்திய vs பாகிஸ்தான் போட்டிகளை பார்ப்பார்களோ அதேபோல தான் சிஎஸ்கே மற்றும் மும்பைக்கு இடையேயான போட்டிகளையும் பார்ப்பார்கள்.

சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ட்விட்டர் பக்கத்தில் ப்ராவோ உங்களால் தான் எங்கள் அணிக்கு ஆல் – ரவுண்டர் பொல்லார்ட் கிடைத்துள்ளார் அதற்கு நன்றி என்று ஒரு பதிவை செய்துள்ளனர். அதற்கான காரணம் இதோ; நான் 2008 ஆம் ஆண்டு இருந்து 2010 ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் விளையாடினேன்.

பின்பு என்னை விடுவித்த மும்பை இந்தியன்ஸ், அதன்பின்னர் 2011ஆம் இருந்து இப்பொழுது வரை நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தான் விளையாடுகிறேன். 2010ஆம் என்னை விடுவித்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு வீரர் தேவை இருந்தது. அப்பொழுது நான் தான் பொல்லார்ட் பெயரை கொடுத்தேன்.

அப்பொழுது நான் பொல்லார்ட் -ஐ அழைத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் காண்ட்ராக்டில் கையெழுத்து செய்யும்படி கேட்டான். அப்பொழுது நானா? உண்மையாவே ? என்று ஆர்ச்சரியதுடன் என்னை பொல்லார்ட் பார்த்தார் என்று கூறியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ப்ராவோ.