ரோஹித் இல்லை ; ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக இவரை தேர்வு செய்தால் ; இந்திய அணிக்கு சிறப்பாக தொடக்க ஆட்டம் அமையும் ; முன்னாள் வீரர் ஓபன் டாக் ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று கொண்டு வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியின் விவரம் :

டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி 133.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 404 ரன்களை அடித்தனர். அதில் கே.எல்.ராகுல் 22, சுப்மன் கில் 20, புஜாரா 90, ஸ்ரேயாஸ் ஐயர் 86, விராட்கோலி 1, ரிஷாப் பண்ட் 46, அக்சர் பட்டேல் 14, ரவிச்சந்திரன் அஸ்வின் 58, குல்தீப் யாதவ் 40, உமேஷ் யாதவ் 15 ரன்களை அடித்தனர்.

பின்னர் 405 ரன்களை அடிக்க வேண்டிய நிலையில் களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு பின்னடைவு தான் மிஞ்சியது. ஏனென்றால், வெறும் 55.5 ஓவர் விளையாடிய பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 10 விக்கெட்டை இழந்த நிலையில் 150 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதனால் 254 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளனர்.

இதில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 24, ரஹீம் 28, மெஹிடி 25 ரன்களை அடித்துள்ளனர். இன்று காலை முதல் தொடங்கிய இரண்டாவது இன்னிங்ஸ்-ல் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 36 ஓவர் முடிவில் 132 ரன்களை அடித்த நிலையில் 1 விக்கெட்டை இழந்துள்ளது இந்திய. அதில் கே.எல்.ராகுல் 23, புஜாரா 28*, சுப்மன் கில் 77* ரன்களை அடித்துள்ளனர். பின்பு 61.4 ஓவர் முடிவில் 258 ரன்களை அடித்த நிலையில் Declare செய்தது இந்திய.

பின்பு இரண்டாவது இன்னிங்ஸ்-ல் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 324 ரன்களை அடித்தனர். அதனால் 188 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது இந்திய. இந்த தொடரில் சுப்மன் கில் பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதனால் அனைத்து விதமான போட்டிகளிலும் (டி-20, ஒருநாள் மற்றும் டெஸ்ட்) சுப்மன் கில் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டுமென்று இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமத் கைப் கூறியுள்ளார்.

மேலும் இதனை பற்றி பேசிய கைப் கூறுகையில் : “இப்பொழுது இருக்கும் இந்திய டெஸ்ட் போட்டிக்கான ப்ளேயிங் 11ல் மாற்றம் செய்வது கடினமான ஒன்று தான். ஏனென்றால் இப்பொழுது 5 பவுலர்களை வைத்து விளையாடி வருகின்றனர். ரோஹித் சர்மா அணியில் இடம்பெறும் பட்சத்தில் சுப்மன் கில்-க்கு வாய்ப்பு கிடைப்பது சிரமம் தான். அப்படியும் இடம்பெற வேண்டுமென்றால் பவுலர்களில் ஏதாவது ஒரு வீரரை அணியில் இருந்து வெளியேற்ற வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும் இந்திய.”

“சுப்மண் கில் அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். ஒருவேளை நான் சுப்மன் கில்- ஆக இருந்திருந்தால் என்னை தேர்வு செய்கிறார்களோ இல்லையோ, நான் என்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தேன். அதுமட்டுமின்றி, இன்னும் கூடிய விரைவில் அனைத்து விதமான போட்டிகளிலும் சுப்மன் கில் நிச்சியமாக இடம்பெறுவார்.”

“சுப்மன் கில் சில ஷாட்ஸ்-களை பயன்படுத்தி ரன்களை அடித்து வருகிறார். அதுமட்டுமின்றி இந்திய அணியில் விளையாடிய சுப்மன் கில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்துள்ளார். அதனால் இவரை போன்ற வீரரை தடுக்கவே முடியாது. அதனால் ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது கே.எல்.ராகுல் ஆகிய இருவரையும் வெளியேற்றுங்கள். நிச்சியமாக சுப்மன் கில்-க்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார் முகமத் கைப்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here