வெங்கடேஷ் ஐயர் இடத்திற்கு இனி ஆபத்து தான் ; அதனை தட்டிப்பறிக்க போகிறது இவர் தான் ; முன்னாள் வீரர் உறுதி ;

0

கடந்த மாதங்களில் இந்திய அணியின் கேப்டன் பற்றிய சர்ச்சை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ஆமாம், ஆனால் இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் -ரவுண்டர் பற்றிய பேச்சு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சரியாக கடந்த ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணியில் விளையாடாமல் இருக்கிறார் ஹார்டிக் பாண்டிய.

காரணம் என்ன ?

அவருக்கு கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு அவரால் சரியாக விளையாட முடிவில்லை. ஹர்டிக் பாண்டிய பவுலிங் ஆல் -ரவுண்டர். ஆனால் அவரால் சரியாக பவுலிங் வீச முடியாமல் திணறிக்கொண்டே வந்தார். வெறும் பேட்ஸ்மேனாக ஒரு சில போட்டிகளில் விளையாடி வந்தார் ஹார்டிக்.

இருப்பினும் அவரது விளையாட்டை பார்த்து நிச்சயமாக ஐசிசி டி-20 2021 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட மாட்டார் என்று பலர் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் அணியில் இடம்பெற்றது அதிர்ச்சியாக தான் இருந்தது.

பின்னர் உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு ஹார்டிக் பாண்டிய கூறுகையில் : நான் பவுலிங் சரியாக செய்யும் வரை என்னை எந்த போட்டியில் விளையாட என்னை தேர்வு செய்ய வேண்டாம் இல்லை என்று அவரே கூறினார். அதற்கு முக்கியமான காரணம் அவர் (ஹார்டிக் பாண்டிய) பவுலிங் பயிற்சி செய்ய வேண்டும் என்றதால் தான்.

ஆனால் இப்பொழுது ஹார்டிக் பாண்டிய இடத்தில் வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடி வருகிறார் என்பதே உண்மை. இதனை பற்றி பேசிய முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் ; வெங்கடேஷ் ஐயருக்கு நிச்சியமாக போட்டி இருக்கும், அதில் ஹார்டிக் பாண்டிய வென்றால் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

ரவீந்திர ஜடேஜா சுழல் பந்து -ஆல் ரவுண்டர், ஹார்டிக் பாண்டிய வேகப்பந்து -ஆல் ரவுண்டர். இப்பொழுது வெங்கடேஷ் இந்திய அணியில் விளையாடி வருகிறார். ஆனால் இப்பொழுது ஹார்டிக் பாண்டிய சிறப்பாக பவுலிங் செய்ய தொடங்கிவிட்டார். அதனால் ஐயருக்கு இனி வாய்ப்பு எந்த அளவிற்கு கிடைக்கும் என்று தெரியவில்லை.

வீரர்கள் உள்ளார்கள் என்று 18 அல்லது 20 வீரர்களை ஒவ்வொரு போட்டியிலும் வைத்திருக்க முடியாது. அதுமட்டுமின்றி ஐசிசி உலகக்கோப்பை போட்டிகளில் அதிகபட்சமாக 15 வீரர்களை மட்டுமே வைத்திருக்க முடியும். 15 பேரில் ஹார்டிக் பாண்டிய நிச்சயமாக ஒரு இடத்தை கைப்பற்றிவிடுவார்.

இந்திய அணியின் ஆல் -ரவுண்டர் பக்கத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹார்டிக் பாண்டிய ஆகிய இருவரையும் தான் வைத்திருப்பார்கள். ஒருவேளை ஹார்டிக் பாண்டிய பிட்னெஸ் இல்லை என்றால் வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.

இந்த முறை ஐபிஎல் டி-20 லீக் போட்டியில் குஜராத் அணியின் கேப்டனாக களமிறங்க உள்ளார் ஹார்டிக் பாண்டிய. அதில் ஹார்டிக் பாண்டிய எப்படி விளையாட போகிறார் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here