இவரால் ஒரு பேட்ஸ்மேனாக நான் பல இரவுகள் தூங்காமல் இருந்துள்ளேன் ; சங்கக்கார சொன்ன அந்த இந்திய வீரர் யார் தெரியுமா ?

இலங்கை அணியின் முன்னாள் வீரர் மட்டுமின்றி சிறந்த பேட்ஸ்மேனான குமார் சங்கக்கார, 15 ஆண்டுகள் இலங்கை அணிக்கு பேட்ஸ்மேனாக இருந்துள்ளார். அதில் 28,016 ரன்களை அடித்துள்ளார். அதிலும் பல பவுலர்களை நடுங்க வைத்துள்ளார் குமார் சங்கக்கார.

ஆனால் எனக்கும் ஒரு பவுலர் மிரட்டல் ஆட்டத்தை காட்டி உள்ளார். அதேபோல, ஒரு பேட்ஸ்மேனாக அவரது அசத்தலான பந்து வீச்சால் பல இரவுகள் தூங்காமல் இருந்துள்ளேன். கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் அதிரடியான வீரர்கள் பட்டியலில் சங்கக்கராவும் இடம்பெற்றுள்ளார்.

இவர் அணியில் இருக்கும்போது பல முறையில், இலங்கை அணி உலகக்கோப்பை போட்டிகளில் இறுதி வரை வந்துள்ளது. 2011ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி இறுதி போட்டிவரை வந்துள்ளது.

இவர் 2015ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நேரத்தில் அதிக ரன்களை எடுத்ததில் இரண்டாவது இடத்தில் இருந்துள்ளார். அதேபோல டெஸ்ட் டெஸ்ட் போட்டிகளிலும் 6வது இடத்தில இருந்துள்ளார் குமார் சங்கக்காரா. அதேநேரத்தில் பவுலர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஆனால் நான் கிரிக்கெட் விளையாடும் நேரத்தில் என்னை பல இரவுகள் தூங்காமல் வைத்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான அனில் கும்ப்ளே என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் பல முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அனில் கும்ப்ளே நாள் நான் பல இரவுகளாக நான் தூங்கவில்லை. ஏனென்றால் நான் யார் பந்து வீசினாலும், சுலபாக அதனை எதிர்கொள்வேன். ஆனால் இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளரான அனில் கும்ப்ளே பந்தை எதிர்கொள்ளுவது மிகவும் கடினம். அவரது பந்தை எதிர்கொள்ளுவது மிகவும் கடினம்.

எனக்கு இப்பொழுதும் நியாபகத்துக்கு சில முக்கியமான நிகழ்வுகள் நியபகத்துக்கு வருகிறது. அதில் ஒரே போட்டியில் 10 விக்கெட்டை கைப்பற்றினார் அனில் கும்ப்ளே. அது நேற்று நடந்தது போல தான் இருக்கிறது. அவர் மிகவும் கடினமான சூழல் பந்து வீச்சாளர் என்பதில் சந்தேகமில்லை.