தோனிக்கு அடுத்தது இவர் தான் இந்திய அணியின் முக்கியமான கேப்டன் ; அதில் மாற்றமே இல்லை ; வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் டேரன் சமி ஓபன் டாக் ;

0

அட அட… ! இந்திய அணியின் கேப்டன் பற்றிய பேச்சு தினம்தோறும் அதிகரித்து கொண்டே போகிறது. அதேபோல வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான டேரன் சமி.

கடந்த சில மாதங்களாக இந்த சர்ச்சை எழுந்து கொண்டு தான் இருக்கிறது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஐசிசி உலகக்கோப்பை டி20 2021 போட்டிக்கு பிறகு விராட்கோலி அவராகவே டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார். பின்னர் விராட்கோலியை ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்றினார்கள்.

விராட்கோலியை அடுத்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான கேப்டனாக ரோஹித் சர்மா பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி தோல்வியை பெற்றது. அதனால் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதனால் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் யார் என்ற குழப்பத்தில் உள்ளது பிசிசிஐ.

இதற்கிடையில், தான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான டேரன் சமி இந்திய அணியின் கேப்டனை பற்றி பேசியுள்ளார். அதில் ” விராட்கோலி ஒரு கேப்டனாக மட்டுமின்றி ஒரு வீரராக பல சாதனைகளை செய்துள்ளார்”. ஆனால் இப்பொழுது ரோஹித் சர்மா சிறந்த கேப்டன் தான், நல்ல ஒரு தலைவன். ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி பல முறை கோப்பையை வென்றுள்ளது.

தோனியை போல இவரும் அணியை வழிநடத்தி பல வெற்றியை பெற காரணமாக இருந்துள்ளார். விராட்கோலி, தோனி மற்றும் ரோஹித் சர்மா போன்ற மூவரும் சிறப்பான முறையில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளனர். இவர்கள் அனைவரும் இந்திய அணியை வழிநடத்தி வெற்றிகளை பெற காரணமாக இருந்துள்ளனர். அதுவும் இப்பொழுது இந்திய அணி சிறந்த வீரரிடன் தான் உள்ளது.

அதனால் எனக்கு இந்திய அணியை பற்றி எந்த கருத்தும் இல்லை என்று கூறியுள்ளார் டேரன் சமி. வருகின்ற 6ஆம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை பற்றி பேசிய டேரன் சமி ; பொல்லார்ட் நிச்சியமாக வெஸ்ட் இண்டீஸ் அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமின்றி, நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில் விளையாடி வருகிறார். அதனால் சுலமாக இந்திய அணியை எதிர்கொள்வார்….!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here