அணைத்து இளம் இந்தியா வீரர்களின் வெற்றிக்கு இவர் தான் காரணம் ; முன்னாள் இந்திய வீரரை பாராட்டும் மைக்கல் வாகன் …!

இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பற்றி பல கருத்துக்களை பகிர்ந்துள்ளார் மைக்கல் வாகன். சமீபத்தில் நேரிய இளம் வீரர்கள் இந்தியா கிரிக்கெட் அணியின் இணைந்துள்ளனர். அவர்களில் பலர் இந்தியா – ஏ பிரிவை சேர்த்தவர்கள். அதில் ராகுல் டிராவிட் தான் இந்தியா அணியின் ஏ -பிரிவை வழி நடத்தி வருகிறார்.

19வயது கீழ் உள்ள வீரர்களுக்கு அதிக தன்மைபிக்கை அவர்களுக்கு ஊட்டியுள்ளார் என்று கூட சொல்லலாம். இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆன குர்னல் பாண்டிய மற்றும் பிரஷித் கிருஷ்ணா அசத்தலான ஆட்டத்தை விளையாடி உள்ளனர். முதல் சர்வதேச போட்டியில் குர்னல் பாண்டிய 31 அபிடன்ஹில் 58 ரன்களை எடுத்துள்ளார். அதே சமையத்தில் பிரஷித் கிருஷ்ணா முக்கியமான 4 விக்கெட்டை எடுத்துள்ளார்.

இந்த இருவரும் இந்தியா – ஏ பிரிவை சேர்ந்தவர்கள். ராகுல் டிராவிட் இளம் வீரர்கள் பலரை நன்றாக பயிற்சியளித்து விளையாட வைத்துள்ளார். இளம் இந்தியா கிரிக்கெட் வீரர்கள் ரிஷாப் பண்ட், சுமன் கில், வாஷிங்டன் சுந்தர், அக்ஸார் பட்டேல், தாகூர் ஆகிய வீரர்கள் டிராவிடின் இந்தியா அணியின் – ஏ பிரிவை சேர்த்தவர்கள் என்று கூறியுள்ளார் வாகன்.

Read More : விராட் கோலியை போல நாங்கள் இதனை செய்யவே மாட்டோம் ; பென் ஸ்டோக்ஸ் அதிரடி கருது..!

முதல் ஒருநாள் போட்டியில் முதல் சில ஓவர் வீசிய பிரஷித் கிருஷ்ணா ஓவருக்கு 12 ரன்கள் கொடுத்துள்ளார். ஆனால் எதிர்ப்பாராத விதமாக இங்கிலாந்து அணியின் முக்கியமான பேட்ஸ்மேன் ஜேசன் ராய் மற்றும் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை எடுத்துள்ளார். அதன்பிறகு ரங்களையும் கட்டுப்படுத்தியுள்ளார் பிரஷித் கிருஷ்ணா.

அதற்கு முழுக்காரணமாக ராகுல் டிராவிட் இருப்பர் என்று முன்னாள் அணியின் கேப்டன் மைக்கல் வாகன் இந்தியா வீரர் ராகுல் டிராவிட் பற்றி புகழ்ந்து கூறியுள்ளார். அதனால் இந்தியா கிரிக்கெட் அணிகளை நல்ல ஒரு ஆதரவாக இருக்கிறார் ராகுல் என்று கூறியுள்ளார் வாகன்.