சதம் அடிக்க முடியாமல் விக்கெட் இழந்த பென் ஸ்டோக்ஸ், அவரது அப்பாவிடம் மனிப்பு கேட்டார்…! ஏன் தெரியுமா..! நெகிழ்ச்சி சம்பவம்… !!!

0

IND VS ENG 2021: இரண்டாவது ஒருநாள் போட்டி புனே மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தனர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 336 ரன்கள் எடுத்துள்ளனர். அதில் தவான் 4 ரன்கள் , ரோஹித் சர்மா 25 ரன்கள், விராட் கோலி 66 ரன்கள், ராகுல் 108 ரன்கள், ரிஷாப் பண்ட் 77 ரன்கள், ஹார்டிக் பாண்டிய 35 ரன்கள் எடுத்துள்ளனர்.

337 ரன்கள் எடுத்தால் என்று இலகுடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை விளையாடி இந்திய அணியை 6 விக்கெட் வித்தியசத்தில் வென்றது. அதனால் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று 1 – 1 என்ற நிலையில் உள்ளனர். நாளை நடைபெறும் போட்டியில் யார் வெற்றி பெருவர்களோ அவர்களே கோப்பை கைப்பற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சதம் அடிக்க முடியாமல் விக்கெட் இழந்த பென் ஸ்டோக்ஸ், அவரது அப்பாவிடம் மனிப்பு கேட்டார்…! ஏன் தெரியுமா..! நெகிழ்ச்சி சம்பவம்… !!!

இங்கிலாந்து அணியின் முக்கியமான ஆல்- ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவர் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 99 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 35வது ஓவரில் பந்து விசிய புவனேஸ்வர் குமார் , அதனை எதிர்கொண்ட பென் ஸ்டோக்ஸ் அடிக்க முயன்ற போது பேட்டின் நுனியில் பட்டு விக்கெட் கீப்பர் பண்ட் அதனை பிடித்துவிட்டார்.

Also Read; ஏன் ஹார்டிக் பாண்டியாவுக்கு பவுலிங் தரவில்லை?? ; காரணம் கூறிய விராட் கோலி…!

அப்பொழுது அவர் மைதானத்தில் இருந்து பெவிலியன் செல்லும்வரை வனத்தை பார்த்து பேசிக்கொண்டே சென்றார். போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிக்கு பிறகு பென் ஸ்டோக்ஸ் அளித்த பேட்டியில் நான் அடிக்க முயன்ற சதம் என்னுடைய அப்பாவுக்கு சமர்ப்பணம் செய்ய நினைத்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக 99 ரன்களில் ஆட்டம் இழந்துவிட்டேன். அதனால் என்னுடைய அப்பாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு சென்றேன் என்று கூறியுள்ளார் பென் ஸ்டோக்ஸ் இதனை கேட்ட கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

பென் ஸ்டோக்ஸ் அப்பாவின் மூலையில் கேன்சர் இருந்துள்ளது. அதனை அவர் பல வருடங்களாக போராடி வந்துள்ளார். எதிரிபாராத விதமான கடந்த ஆண்டு அவர் இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here