ரோஹித் இல்லை ; ஒருநாள் போட்டியில் இவரை அடிச்சிக்க ஆளே கிடையாது ; இவர் தான் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் ; ஆஷிஷ் நெஹ்ரா ஓபன் டாக் ;

0

நியூஸிலாந்து : கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடரில் விளையாடி வருகின்றனர். அதில் 1 – 0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி தொடரில் முன்னிலையில் உள்ளனர்.

அதுமட்டுமின்றி, நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் மழை காரணமாக முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. அதனால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரில் ட்ராவில் முடியும். இல்லாவிட்டால் நியூஸிலாந்து அணி தொடரை கைப்பற்றிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

ஐசிசி தொடர்கள் :

சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதி சுற்றில் இருந்து வெளியேறியது. அதனால் எந்த அளவிற்கும் இல்லாத நிலையில் இந்த முறை மோசமான விமர்சங்களை எதிர்கொண்டது இந்திய. அதுமட்டுமின்றி, அடுத்த ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை இந்தியாவில் தான் நடைபெற உள்ளது. அதனால் அதில் எப்படியாவது வெல்ல வேண்டுமென்று அனைத்து முயற்சிகளையும் பிசிசிஐ எடுத்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, அணியை முற்றிலுமாக மாற்ற வேண்டுமென்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன்படி இனிவரும் போட்டிகளில் இளம் வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் அதிக அளவில் கொடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்பொழுது இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கான அணியில் தேர்வாகியுள்ள சுப்மன் கில் பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் 50, 45* ரன்களை அடித்துள்ளார். சிறப்பான தொடக்க ஆட்டத்தை அமைத்து வருகிறார் சுப்மன் கில். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆஷிஷ் நெஹ்ரா கூறுகையில் : “ஒருநாள் போட்டியிலும், டெஸ்ட் போட்டியிலும் அதிக சதங்களை அடிக்க போவது இவர் (சுப் மன் கில்) தான். ஏனென்றால் அவரது நோக்கம் அப்படி. சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப விளையாடி வருகிறார்.”

“நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மழைக்கு ,முன்பு பொறுமையாக விளையாடி கொண்டு வந்தார் சுப்மன் கில். ஆனால் இடைவெளிக்கு பிறகு சூர்யகுமார் யாதவிடம் அதிரடியாக விளையாட தொடங்கினார். அதற்கு ஏற்ப இவரும் விளையாட தொடங்கினார். இந்திய அணியில் பிருதிவி ஷாவ், ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்கள் இருந்தாலும் சுப்மன் கில் தான் முன்னிலையில் இருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்று கூறியுள்ளார் ஆஷிஷ் நெஹ்ரா.”

டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் மோசமான தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தி விளையாடி வந்தனர். ஆனால் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை. அதனால் ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக சுப்மன் கில் களமிறங்கினால் சிறப்பாக இருக்குமா ?

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here