இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 இந்தியாவில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் உள்ளனர். கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ஆரம்பித்த ஐபிஎல் 2021 இதுவரை 15 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் பல விறுவிறுப்பான போட்டிகளிலும் இருக்கின்றனர்.
புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரண்டாவது இடத்தில் பெங்களூர் அணியும்,மூன்றாவது இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், நான்காவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் உள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஆன புவனேஷ்வர் குமார் தொடையில் பலமாக அடிபட்டு விட்டதால் அவரால் மீதமுள்ள போட்டியில் கலந்துகொள்ள முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதனால் சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத் அணி ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருக்கின்றனர்.
அதற்கு முக்கியமான காரணம்… இந்த ஐபிஎல் 2021யில் முதல் மூன்று போட்டியில் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. நான்காவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியை கைப்பற்றி அவர்களது முதல் ஐபிஎல்2021 வெற்றியை கொண்டாடி வருகின்றனர். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மூன்று ஓவர் பந்து வீசிய புவனேஸ்வர் குமார் 16 ரன்களை மட்டுமே கொடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் விக்கெட்டை கைப்பற்றி உள்ளார்.
பின்பு அவரால் பீல்டிங் செய்ய முடியாமல் இருந்ததால் அவருக்கு பதிலாக மற்ற வீரரை பீல்டிங் செய்தார். கடந்த ஆண்டு அவருக்கு தொடை எலும்பில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பட்டுள்ளது. அதில் இப்பொழுது ஏதோ பிரச்சனை என்ற காரணத்தால் அவரால் இனிவரும் போட்டிகளில் பவுலிங் செய்ய முடியமா. ??? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இப்பொழுது தான் ஐபிஎல் 2021யின் முதல் வெற்றியை கைப்பற்றியது சன்ரைஸ்சர்ஸ் அணி. ஒருவேளை புவனேஸ்வர் இல்லை என்றால் என்ன செய்ய போகிறது சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத் அணி ?? அதுமட்டுமின்றி கடந்த இரு போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த நட்ராஜன் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.