இந்திய கிரிக்கெட் அணிக்காக அனைத்து ஐசிசி கோப்பைகளையும் பெற்று கொடுத்த ஒரே கேப்டன் அது மகேந்திர சிங் தோனி தான். இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வீரரும் கூட. ஏனென்றால் எந்த சூழ்நிலையிலும் கோவத்தை வெளிப்படுத்தாமல், சக வீரர்களுக்கு உதவியாக இருந்துள்ளார் தோனி.
மகேந்திர சிங் தோனி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் அவரது சர்வேதச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறினார். அதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினார். ஏனென்றால் இந்த மாதிரி ஒரு கேப்டன் நிச்சியமாக இந்திய அணிக்கு கிடைப்பது மிகவும் கடினம்.
ஆனால் மகேந்திர சிங் தோனியை மீண்டும் நிச்சியமாக ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக பார்க்க முடியும் என்று அவரவர் மனதை சமாதானம் செய்து கொண்டனர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், சமீபத்தில் அளித்த பெட்டியில் தோனியை பற்றி சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில் பேசிய அவர் ” தோனி ஒரு மிகச்சிறந்த கேப்டன், அவர் எப்படி பட்ட வீரர் என்று அனைவருக்கு தெரிந்த ஒன்று தான். அவர் ஒரு சிறந்த வீரர் மட்டுமின்றி நல்ல ஒரு மனிதர். யாரவது டோனியை பற்றி பேசினால், அனைவரும் சொல்லும் ஒரே விஷயம் அவர் எப்படி எல்லாம் உதவி செய்வார் என்று.
அதுமட்டுமின்றி, தோனி பல வழிமுறையை இளம் வீரர்களுக்கு பகிர்ந்துள்ளார். அதனால் தான் அவரால் ஒரு சிறப்பான கேப்டனாக இருக்கு முடிந்தது. அவர் வழிநடத்தி தான் இந்திய கிரிக்கெட் அணி அனைத்து ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. அவரது ஓய்வுக்கு பிறகு கூட farewell போட்டி கூட நடத்தவில்லை என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார்.
இந்த ஜூலை மாதத்தில் இந்திய மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளும் 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாட உள்ளனர். அதில் புவனேஸ்வர் குமார் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, இலங்கைக்கு அணிக்கு எதிரான போட்டியில் இவர் தான் இந்திய அணியில் துணை கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.