HomeTrending Newsவீடியோ ; இங்கிலாந்து அணியை திணறவிட்டா அதிரடி பவுலர் இவர் தான் ; அப்போ உலகக்கோப்பை...

வீடியோ ; இங்கிலாந்து அணியை திணறவிட்டா அதிரடி பவுலர் இவர் தான் ; அப்போ உலகக்கோப்பை போட்டியில் இடம் இருக்குமா ?

சவுத்அம்ப்டன் மைதானத்தில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் டி-20 போட்டி நேற்று இரவு சவுத்அம்டன் மைதானத்தில் நடைபெற தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமையவில்லை. ஆமாம், ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடினாலும் 24 ரன்களிலும், இஷான் கிஷான் 8 ரன்களை அடித்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர்..! இருப்பினும் இந்திய அணிக்கு வலுவான மிடில் ஆர்டர் உள்ளது.

ஆமாம், தீபக் ஹூடா, ஹர்டிக் பாண்டிய, சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய கிரிக்கெட் அணிக்கு ரன்கள் குவிந்தன. இறுதி வரை போராடிய இந்திய கிரிக்கெட் அணியால் 198 ரன்களை அடிக்க முடிந்தது. அதில் ரோஹித் 24, இஷான் கிஷான் 8, தீபக் ஹூடா 33, சூரியகுமார் யாதவ் 39, ஹர்டிக் பாண்டிய 51 ரன்களை அதிகமாக அடித்துள்ளனர்.

பின்பு இங்கிலாந்து அணி 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஏமாற்றம் தான் காத்திருந்தது. ஏனென்றால் தொடக்க வீரரான ஜோஸ் பட்லர், லிவிங்ஸ்டன், மற்றும் ஜேசன் ராய் போன்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விக்கெட்டை இழந்த வந்தனர்.

அதனால் பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாமல் திணறினார்கள். இருப்பினும் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால், இங்கிலாந்து அணியின் விக்கெட் ஒருவர் பின் ஒருவராக ஆட்டத்தை இழந்து வந்தனர். அதனால் 19.3 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்து 148 ரன்களை மட்டுமே அடித்தது இங்கிலாந்து அணி.

அதனால் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. ஒருவேளை ஜோஸ் பட்லர் மட்டும் ஆட்டம் இழக்காமல் இருந்திருந்தால், நிச்சியமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆபத்தாக மாறிருக்க வாய்ப்பு அதிகம். ஆனால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் சிறப்பாக பவுலிங் செய்தார்.

ஆமாம், முதல் ஓவரில் புவனேஸ்வர் குமார் வீசிய பந்தை எதிர்கொண்டார் ஜோஸ் பட்லர். அப்பொழுது புவனேஸ்வர் குமார் வீசிய பந்து ஸ்விங் ஆனது. அதனால் பந்து நேராக ஸ்டம்ப்-ல் அடித்ததால் விக்கெட்டை கைப்பற்றினார் புவனேஸ்வர் குமார். அதிரடி வீரரான ஜோஸ் பட்லர் விக்கெட் கைப்பற்றியது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

வீடியோ:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img