இந்திய ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பை டி-20 2022 போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான போட்டிக்கு பஞ்சம் இருக்காது.


இந்திய அணியின் விளையாட்டு:
இந்திய கிரிக்கெட் அணிகள் சமீபத்தில் தான் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, இங்கிலாந்து, இலங்கை போன்ற அணிகளுக்கு இடையேயான தொடர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். ஆமாம், அதனை தொடர்ந்து ஜிம்பாபே அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது இந்திய.
அதனை தொடர்ந்து ஆசிய கோப்பை 2022, தென்னாபிரிக்கா , ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாட உள்ளது இந்திய. அதற்கு பிறகு டி-20 2022 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளதால் தொடர்ந்து விறுவிறுப்பான போட்டிக்கு எந்த பஞ்சமும் இருக்காது.


கம்பேக் கொடுத்த பினிஷர்:
ஐபிஎல் டி-20 2022 போட்டிக்கு பிறகு இந்திய அணியின் பினிஷர் இடத்திற்கு கடும் போட்டி நிலவி வருகிறது தான் உண்மை. ஆமாம், பெங்களூர் அணியில் இடம்பெற்று விளையாடிய தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான ஆட்டத்தால் மீண்டும் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
அதனால் இந்த ஆடு உலகக்கோப்பை போட்டிக்கான இந்தியா அணியிலும் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு கொடுக்க படும் என்று எதிர்பார்க்க படுகிறது. அயர்லாந்து, தென்னாபிரிக்கா , இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் தினேஷ் கார்த்திக் விளையாடி வருகிறார்.
ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் ஆட்டம் சொல்லும் அளவிற்கு இல்லை என்பது தான் உண்மை. ஆனால் ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் தினேஷ். ஒருவேளை ஆசிய கோப்பையிலும் தினேஷ் கார்த்திக் சரியாக விளையாடவில்லை என்றால் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைப்பது சிரமம் தான்.


இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான விவேக் ரஸ்தான் கூறுகையில் ; “பினிஷராக விளையாடுவதற்கு மட்டும் தினேஷ் கார்த்திக் இடம்பெறுவது சரியாக இல்லை. தினேஷ் கார்த்திக் இறுதியாக தான் விளையாடுவார் என்று முடிவு செய்வது சரியான விஷயம் இல்லை.”
“இந்திய அணியில் விராட்கோலி, ஹர்டிக் பாண்டிய, தீபக் ஹூடா, சூரியகுமார் யாதவ் போன்ற வீரர் பினிஷராக விளையாட முடியாத ? ஒரு வீரராக சிறப்பாக விளையாடி கொண்டு இருக்கும்போது மக்கள் அனைவரும் உங்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிச்சியமாக இருக்கும். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டும்.”
“இறுதி பேட்ஸ்மேன் (பினிஷராக) விளையாடுவது மிகவும் முக்கியமான ஒன்று. அதில் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவதும் சிரமம் தான். பினிஷராக விளையாட தொடங்கும் போது , உங்களுது விளையாட்டு நிச்சியமாக அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமையும். அந்த நேரத்தில் பவுலர்கள் வீசும் பந்தை சுழற்றி அடிக்க தோன்றும் என்று கூறியுள்ளார் விவேக்.”