இதோடு நான் விடைபெறுகிறேன் ; வருத்தத்துடன் பேசிய ப்ராவோ ; முழு விவரம் இதோ ;

ஐசிசி உலககோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, அரை இறுதி போட்டிக்கு முன்னேற வேண்டும் என்ற ஒரே காரணத்தால், அனைத்து அணிகளும் போராடி வருகின்றனர். இதற்கிடையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டரான ப்ராவோ சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற போகிறார்….!

இதனை பற்றி பேசிய ப்ராவோ ; எனக்கு தெரிஞ்சு ஓய்வு பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் சிறப்பாக உள்ளது. மொத்தமாக 18 ஆண்டுகள் நான் சிறப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியில் விளையாடியுள்ளேன். அதில் பல ஏற்றம் இறக்கம் இருந்துள்ளது என்று கூறியுள்ளார் ப்ராவோ.

இதுவரை நாங்கள் மூன்று முறை ஐசிசி கோப்பைகளை பெற்றுள்ளோம். அதில் இரு முறை சமி கேப்டனாக வழிநடத்தினார். ஆனால் இந்த முறை அவர் இல்லை. ஆனால் இந்த உலககோப்பை டி20 2021 நாங்கள் எதிர்பார்த்த போட்டி இல்லை. இந்த முறை கடினமான போட்டியை எதிர்கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளார் ப்ராவோ….!!!

இதுவரை ப்ராவோ விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி வெறும் 1 போட்டியில் மட்டுமே வெற்றியை கைப்பற்றியுள்ளது. அதனால் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்….!!! சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்ப்பு பெற்றாலும், ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்க படுகிறது….!!!

ஐபிஎல் போட்டிகளில் பல ஆண்டுகளாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்து விளையாடி வருகிறார்கள். ஆனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டியில் இரு அணிகள் புதிதாக இடம்பெற போவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதனால் மிகப்பெரிய அளவில் ஏலம் நடைபெற உள்ளது. அதில் சிஎஸ்கே அணியை சேர்ந்த ப்ராவோ இந்த முறை தக்க வைத்துக்கொள்ள மாட்டார் என்று எதிர்பார்க்க படுகிறது…!!!