Advertisement
HomeTrending Newsநான் இதோட விடைபெறுகிறேன் ; என்னால் இதற்கு மேல் விளையாட முடியாது ; ஓய்வை அறிவித்த...

நான் இதோட விடைபெறுகிறேன் ; என்னால் இதற்கு மேல் விளையாட முடியாது ; ஓய்வை அறிவித்த ப்ராவோ என்ன செய்தார் தெரியுமா ?

ஐபிஎல் :ஐபிஎல் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலம் வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி அன்று கேரளாவில் நடைபெற உள்ளது. அதில் யார் எந்த அணியில் இடம்பெற போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் இடையே எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். பின்பு ரசிகர்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது ஐபிஎல் போட்டிகள். இதுவரை வெற்றிகரமாக 15 சீசன் நடைபெற்று முடிந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

ஐபிஎல் போட்டிகளில் அதிகப்படியான போட்டிகளில் வென்ற அணியாக சென்னை அணி திகழ்கிறது. ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாக தான் சென்னை அணி திகழ்கிறது. அதுமட்டுமின்றி சென்னை அணியை கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து மகேந்திர சிங் தோனி தான் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

இதுவரை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் நான்கு முறை கோப்பையை வென்றுள்ளனர். பின்பு அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதால் அணியில் தக்கவைத்து கொள்ளாத வீரர்களின் பட்டியலை அனைத்து அணிகளும் வெளியிட்டனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ப்ராவோ, ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டான் போன்ற வீரர்கள் வெளியேற்றியுள்ளனர். அதனால் சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக நம்பிக்கையான ஆல் – ரவுண்டராக விளையாடி வரும் ப்ராவோ – வை வயது காரணமாக அணியில் இருந்து வெளியேற்றியது சென்னை.

அதுமட்டுமின்றி, ஐபிஎல் 2023 ஏலத்தில் ப்ராவோ -வின் பெயர் இடம்பெறவில்லை. அதனால் ப்ராவோ இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இல்லையோ என்று பல கேள்விகள் எழுந்தது. ஆனால் அவர் (ப்ராவோ) இனிமேல் ஐபிஎல் தொடரில் விளையாட போவதில்லை என்று முடிவு செய்துள்ளார்.

இதனை பற்றி பேசிய ப்ராவோ கூறுகையில் : ” நான் கடந்த 15 ஆண்டுகளாக மிகவும் கடுமையான டி-20 லீக் போட்டிகளில் விளையாடி வருகிறேன். ஆனால் இதற்கு பிறகு நான் ஐபிஎல் தொடரில் விளையாட போவது இல்லை. பல ஏமாற்றமும், இறக்கமும் இருந்த டி-20 போட்டிக்கான பாதையில் 15 ஆண்டுகள் பயணம் செய்துள்ளேன். இன்றுடன் ஓய்வு பெறுவது நிச்சியமாக கஷ்டமான விஷயம் தான். இருந்தாலும் பரவாயில்லை, நான் இனிவரும் காலங்களில் சிஎஸ்கே அணியின் பவுலர்களுடன் பணியாற்ற ஆசையாக இருகிறேன்.”

“பயிற்சியாளராக பணியாற்ற போவதை நினைத்தால் சற்று சுவாரஷியமாக தான் இருகிறது. அடுத்த இளம் வீரர்களை சரியாக வழிநடத்தி கொண்டு செல்வது மிகவும் முக்கியமான ஒன்று என்றும். என்னை ஆதரித்த அனைத்து சென்னை ரசிகர்களுக்கு மிக்க நன்றி என்று கூறியுள்ளார் ப்ராவோ.”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular