இன்று இரவு 7:00 மணியளவில் தொடங்கியது தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி. இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளனர்.

இந்திய அணியின் முன்னேற்றம் :
கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணியின் விளையாட்டில் பல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இலங்கை, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் போன்ற நாடுகளுக்கு இடையேயான தொடரில் சிறப்பாக விளையாடி வென்று வருகிறது இந்திய அணி.
ஆனால் ஆசிய கோப்பை, உலகக்கோப்பை போன்ற போட்டிகளில் மட்டும் இந்திய கிரிக்கெட் அணி சொதப்பி வருகிறது தான் உண்மை. இருப்பினும் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று டி-20 போட்டியில் இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளனர்.

இந்திய அணியின் முக்கியமான பவுலர் :
சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை டி-20 போட்டியில் இந்திய அணி வெளியேறியதற்கு முக்கியமான காரணம் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இல்லாதது தான். ஆனால் இப்பொழுது இரு வீரர்களும் இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளனர்.
அதனால் நிச்சியமாக இந்திய அணிக்கு பாசிட்டிவ் ஆன விஷயம் தான். குறிப்பாக பும்ரா இல்லாவிட்டால் சரியான வேகப்பந்து வீச்சாளரை இந்திய அணி இழந்துவிடுகிறது. அதனால் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு தான் ஏற்பட்டுள்ளது. தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் விளையாடி வரும் நிலையில் பும்ரா அணியில் இடம்பெறவில்லை.
பும்ரா ஏன் இல்லை ?

“டாஸ் வென்ற பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா ; நேற்றுவரை பும்ரா பயிற்சி மேற்கொண்டு தான் வந்தார். ஆனால் இன்று தீடிரென்று அவருடைய காலில் தசை பிடித்துவிட்ட காரணத்தால் அவரால் சரியாக ஓட முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. அதனால் அவருக்கு பதிலாக தீபக் சஹார் அணியில் இடம்பெற்றுள்ளார் என்று கூறியுள்ளார் ரோஹித்.”
ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் குறைந்தது இரு மாதங்கள் எந்த விதமான போட்டிகளிலும் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் ஜடேஜாவிற்கு காயம் ஏற்பட்டது. அதனால் அவரால் வருகின்ற ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
அதேபோல தான் பும்ராவிற்கும் ஏற்படுமா ? அப்படி நடந்தால் பும்ராவிற்கு பதிலாக யார் அணியில் இடம்பெற்றால் சரியாக மாற்றமாக இருக்கும் ?
0 Comments