இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் பற்றிய சர்ச்சை சமீபத்தில் தான் நடந்து முடிந்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் விராட்கோலி அவராகவே கேப்டன் பதவியில் இருந்து வெளியேற போவதாக தகவல் வெளியானது. பின்னர் விராட்கோலி மற்றும் பிசிசிஐ ஆகிய இருவருக்கும் இடையே மிகப்பெரிய சர்ச்சை எழுந்துள்ளது.


அதனை ஒருவழியாக விரைவாக முடிந்த பிறகு இந்திய அணிக்கு அனைத்து விதமான போட்டிகளுக்கும் ரோஹித் சர்மா தான் கேப்டன் என்று பிசிசிஐ உறுதியான தகவலை வெளியிட்டது. ஆனால் ரோஹித் ஷர்மாவுக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கும் ராசியே இல்லை ?
ஆமாம், சில மாதங்களுக்கு முன்பு நடந்த தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறினார். அதேபோல நாளை இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.


ஆனால் எதிர்பாராத விதமான ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இந்திய அணியின் கேப்டனாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா இடம்பெற்றுள்ளார். இந்திய அணியின் முக்கியமான பவுலராக விளையாடி வருகிறார் பும்ரா.
பும்ரா கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை இந்திய கிரிக்கெட் அணியில் 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 123 விக்கெட்டையும், 68 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 110 விக்கெட்டையும், 57 டி-20 போட்டிகளில் விளையாடி 67 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் பும்ரா..!