பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியும், எல்கர் தலைமையிலான தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியும் மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.


இதில் முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது ஆஸ்திரேலியா. அதனை அடுத்து நேற்று ஆரம்பித்துள்ளது இரண்டாவது டெஸ்ட் போட்டி. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கு தொடக்கத்தில் இருந்து சரியான பார்ட்னெர்ஷிப் அமையாத காரணத்தால் தொடர்ந்து மோசமான நிலையில் விளையாடி வந்தது.
சரியாக 68.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த தென்னாபிரிக்கா அணி 189 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதனை அடுத்து இப்பொழுது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸ்-ல் விளையாடி வருகின்றனர். இதுவரை 63 ஓவர் முடிந்த நிலையில் 2 விக்கெட்டை இழந்த நிலையில் 231 ரன்களை அடித்துள்ளனர். அதில் டிராவிட் வார்னர் 135*, உஸ்மான் கவாஜா 1, ஸ்டீவன் ஸ்மித் 60* ரன்களை அடித்துள்ளனர்.


இதற்கிடையில், சரியாக முதல் இன்னிங்ஸ் விளையாடி கொண்டு இருந்த தென்னாபிரிக்கா அணி 64 ஓவர் முடிவில் 179 ரன்களை அடித்த நிலையில் 5 விக்கெட்டை மட்டுமே இழந்தனர். ஆனால் , அதன்பின்பு 4.8 ஓவரில் 189 ரன்களை அடித்த நிலையில் 10 விக்கெட்டையும் இழந்தது தென்னாபிரிக்கா. அதற்கு முக்கியமான காரணம் ஆஸ்திரேலியா வீரரான கேமரூன் கிறீன் தான். சிறப்பாக பவுலிங் செய்து 10.4 ஓவர் முடிவில் 27 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் 5 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.
ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலம் இரு தினங்களுக்கு முன்பு தான் கேரளாவில் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி 17.50 கோடி விலை கொடுத்து ஆல் – ரவுண்டர் கேமரூன் க்ரீனை கைப்பற்றியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ஜோபர் அர்ச்சர், ஜேசன் பெஹ்ரேன்டொரஃ, டிம் டேவிட், ரிச்சர்ட்சன் போன்ற சிறந்த வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2023 போட்டியில் எந்த அணி பலமாக இருக்கிறது ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்….!