Video ; கிரிக்கெட் வாழ்க்கையில் இறுதியாக ஒரு விக்கெட்டை எடுத்து, எதிர் அணியின் வீரரை கட்டி அணைத்து வழி அனுப்பிய கெயில் நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது ….!!!

இன்று மதியம் 3 மணியளவில் நடைபெற்ற போட்டியில் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். இந்த போட்டி அபுதாபி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி,பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாத காரணத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 157 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதில் கெயில் 15, லீவிஸ் 29, பூரான் 4, ஹெட்மயர் 27,பொல்லார்ட் 44, ப்ராவோ 10, ரசல் 18 போன்ற ரன்களை அடித்துள்ளனர்.

பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி. தொடக்க ஆட்டத்தில் சற்று தயக்கம் ஏற்பட்டாலும், பின்னர் போக போக ரன்களை அடித்து விளாசினார்கள். அதனால் 16.2 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 161 ரன்களை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது.

அதில் டேவிட் வார்னர் 89, ஆரோன் பின்ச் 9, மிச்சேல் மார்ஸ் 53, மேக்ஸ்வெல் 0 ரன்களை அடித்துள்ளனர். அதுமட்டுமின்றி, இதுதான் கிறிஸ் கெயில் வீரருக்கு இறுதி போட்டி, ஓய்வு பெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போட்டி நடைபெற்று கொண்டு இருந்த போது , 15வது ஓவர் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் பவுலிங் செய்தார்.

அதனை எதிர்கொண்ட மிச்சேல் மார்ஸ் ஆட்டம் இழந்தார். அப்பொழுது கிறிஸ் கெயில் ஓடி போய் எதிர் அணியின் பேட்ஸ்மேன் ஆன மிச்சேல் மார்ஸ்-ஐ கட்டி அணைத்து கொள்ளும் வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது…..!!!

வீடியோ ;

கிரிக்கெட் போட்டி என்று வந்துவிட்டால் எதிர் அணியின் பவுலிங்கை அடித்து தொம்சம் செய்விடுவார். ஆனால், சமீப காலமாக அவருக்கு பேட்டிங் செய்தும் ரன்களை அடிக்க முடியாமல் போனது. ஆனால் கிறிஸ் கெயில் ஒரு திறமையான பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை….!!

யாருக்கெல்லாம் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் ரொம்ப பிடிக்கும் … !! ஏன் பிடிக்கும் என்பதை உங்கள் கருத்துக்களை மறக்காமல் Comments பண்ணுங்க…..!!!!