இவர் இப்படியெல்லாம் விளையாடுவார் என்று நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

0

நேற்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. அதனால் தொடர்ந்து விக்கெட்டை இழந்த வந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி வந்தார். அதனால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த நிலையில் 161 ரன்களை அடித்தது மும்பை.

அதில் ரோஹித் 3, இஷான் கிஷான் 14, ப்ரேவிஸ் 29, சூர்யகுமார் யாதவ் 52, திலக் வர்மா 38, பொல்லார்ட் 22 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு வெற்றி காத்திருந்தது. தொடக்க வீரரான ரஹானே 7 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

பின்பு வெங்கடேஷ் ஐயர் மற்றும் பேட் கம்மின்ஸ் இருவரும் விளையாடிய அதிரடியான ஆட்டத்தால் தான் கொல்கத்தா அணி 16 ஓவர் முடிவில் வெற்றியை கைப்பற்றியது. அதில் ரஹானே 7. வெங்கடேஷ் ஐயர் 50, ஷ்ரேயாஸ் ஐயர் 10, சாம் பில்லிங்ஸ் 17, நிதிஷ் ரானா 8, ரசல் 11, பேட் கம்மின்ஸ் 56 ரன்களை அடித்துள்ளனர்.

இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடிய மும்பை அணி அனைத்திலும் தோல்வியை பெற்று இப்பொழுது 7வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 4 போட்டிகளில் விளையாடிய மூன்று போட்டிகளில் வென்று புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது….!

போட்டி முடிந்த பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் கூறுகையில் ; “போட்டியில் என்ன நடந்தது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆமாம், அதுவும் அவர் (பேட் கம்மின்ஸ்) அதிரடியாக விளையாடுவார் என்று சத்தியமாக நான் எதிர்பார்க்கவே இல்லை.”

“அவருக்கு தான் பாராட்டு, நிச்சியமாக பேட்டிங் செய்ய செய்ய பிட்ச் -பேட்டிங்-க்கு சாதகமாக மாறிக்கொண்டே இருந்தன. நாங்கள் பேட்டிங் செய்த போது சரியான தொடக்கம் அமையவில்லை. ஆனால் இறுதியாக 4 – 5 ஓவரில் 70க்கு மேற்பட்ட ரன்களை நாங்கள் அடித்துள்ளோம்.”

நாங்கள் பவுலிங் செய்த போது பிளான் செய்தது போல செய்யவில்லை. 15வது ஓவர் வரை போட்டி எங்கள் கையில் இருந்தது. அதன்பின்னர், தான் பேட் கம்மின்ஸ் அதிரடியாக விளையாட தொடங்கினார். எல்லாத்தையும் விட வெங்கடேஷ் ஐயர் மற்றும் பேட் கம்மின்ஸ் விக்கெட் தான் முக்கியமான ஒன்று அதனை கைப்பற்ற தவறிவிட்டோம், என்று கூறியுள்ளார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here