Advertisement
HomeIPLஇதை தான் கவனிக்காமல் விட்டுவிட்டோம் ; தோல்விக்கான காரணத்தால் பற்றி பேசிய ஜடேஜா ; ஓபன்...

இதை தான் கவனிக்காமல் விட்டுவிட்டோம் ; தோல்விக்கான காரணத்தால் பற்றி பேசிய ஜடேஜா ; ஓபன் டாக் ;

நேற்று மதியம் 3:30 மணியளவில் நடைபெற்ற போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியும் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள பட்டில் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி வேறு வழியின்றி களமிறங்கிய சென்னை அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. ஆமாம், முதல் 6 ஓவரில் தொடக்க வீரர்களான ராபின் உத்தப்பா மற்றும் ருதுராஜ் ஆகிய இருவரும் தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர்.

இருப்பினும் மொயின் அலி, ராயுடு, ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் இறுதி ஓவர் வரை விளையாடி ரன்களை சேர்த்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 154 ரன்களை அடித்தது சென்னை. அதில் ராபின் உத்தப்பா 15, ருதுராஜ் கெய்க்வாட் 16, மொயின் அலி 48, அம்பதி ராயுடு 27, ஷிவம் துபே 3, ரவீந்திர ஜடேஜா 23 போன்ற ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிக்கு வெற்றி காத்திருந்தது தான் உண்மை. ஆமாம் அபிஷேக் ஷர்மாவின் அதிரடியான ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் அணிக்கு சிறப்பாக தொடக்கம் மட்டுமின்றி நல்ல பார்ட்னெர்ஷிப் அமைந்தது. அதனால் 17.4 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்த நிலையில் 155 ரன்களை அடித்தது சன்ரைசர்ஸ். அதில் அபிஷேக் சர்மா 75, கேன் வில்லியம்சன் 32, ராகுல் திரிபதி 39, பூரான் 5 ரன்களையும் அடித்துள்ளனர்.

அதனால் சென்னை அணியை 8 விக்கெட்டை விதியசத்தில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி. போட்டி முடிந்த பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டனான ரவீந்திர ஜடேஜா கூறுகையில் ; “எங்கள் அணிக்கு சரியான தொடக்க அமையவில்லை. எனக்கு தெரிந்து 25 ரன்கள் குறைவாக அடித்துவிட்டோம்.”

“அதுமட்டுமின்றி எங்கள் பவுலர்கள் சரியான பகுதியை நோக்கி பவுலிங் செய்தனர், ஆனால் சரியான நேரத்தில் விக்கெட்டை கைப்பற்ற முடியவில்லை. நாங்கள் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் தான், அதனால் தவறு எங்கு உள்ளது என்பதை பார்த்து அதனை சரி செய்ய வேண்டியது எங்கள் கடமை.”

“நாங்கள் பேட்டிங் மற்றுமின்றி பவுலிங்-கிலும் தவறுகளை செய்துதான் வருகிறோம், அதனை நிச்சியமாக இனிவரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோம் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளார் சென்னை அணியின் கேப்டனான ரவீந்திர ஜடேஜா.”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular