HomeTrending Newsஹேப்பி நியூஸ் ..! அடுத்த ஆண்டு இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தான் விளையாடுவார்...

ஹேப்பி நியூஸ் ..! அடுத்த ஆண்டு இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தான் விளையாடுவார் ; சந்தேகம் வேண்டாம் ; சிஎஸ்கே உறுதி ;

ஐபிஎல் : கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். பின்பு ரசிகர்கள் ஆதரவை பெற்று இப்பொழுது ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெற்றிகரமாக 15 சீசன் நடைபெற்று முடிந்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறையும் கோப்பையை வென்றுள்ளனர். இதில் அதிக ரசிகர்களை கொண்ட அணிகளில் ஒன்று தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சென்னை அணியின் கேப்டனாக ஐபிஎல் அறிமுகம் ஆன ஆண்டில் இருந்து வழிநடத்தி வருகிறார் மகேந்திர சிங் தோனி. 41 வயதான மகேந்திர சிங் தோனி கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகினார். அதனால் இன்னும் கூடிய விரைவில் சென்னை அணியில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று பலர் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி ஐபிஎல் 2023ல் நிச்சியமாக தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் இந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டிகள் தொடங்கும் முன்பு ரவீந்திர ஜடேஜாவை தான் கேப்டனாக அறிவித்தது சென்னை அணியின் நிர்வாகம்.

ஆனால் ரவீந்தர் ஜடேஜா தலைமையிலான சென்னை அணி தொடர்ந்து தோல்விகளை மட்டுமே கைப்பற்றி வந்தது. அதனால், மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்று மீதமுள்ள போட்டிகளை வழிநடத்தினார் தோனி. அதுமட்டுமின்றி இப்பொழுது ரவீந்திர ஜடேஜாவிற்கும் சென்னை அணிக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதுமட்டுமின்றி நிச்சியமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா சென்னை அணியில் இருந்து விலகி மற்ற அணிகளில் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி இருக்கும் நிலையில் தோனியும் ஓய்வை அறிவித்தால் சென்னை அணியின் நிலைமை என்னவாக இருக்கும் என்று பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

சமீபத்தில் சென்னை அணியின் CEO கூறுகையில் ; “எங்கள் அணியில் (சென்னை சூப்பர் கிங்ஸ்) எந்த மாற்றமும் இருக்காது. அப்படி மாற்றம் நடக்க போவதாக நாங்கள் எந்த தகவலை சொல்லவில்லை. அடுத்த ஆண்டு நிச்சியமாக ஐபிஎல் 2023 போட்டிகளில் மகேந்திர சிங் தோனி அணியில் விளையாடுவார் என்று கூறியுள்ளார்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img