HomeTrending NewsCSK தோனியை ஆலோசகராக அனுமதி கொடுக்காது ; பிசிசிஐ உறுதி ; அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்கள்...

CSK தோனியை ஆலோசகராக அனுமதி கொடுக்காது ; பிசிசிஐ உறுதி ; அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்கள் ; காரணம் இதுதான் ;

உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிகமான வரவேற்பு பெற்ற போட்டியாக ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் உள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் பேட்டிகளில் இந்தியாவில் அறிமுகம் ஆனது. பின்பு வரவேற்ப்பு பெற்ற நிலையில் ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை வெற்றிகரமாக 15 சீசன் நடந்து முடிந்துள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறையும், சென்னை அணி நான்கு முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரு முறையும் கோப்பையை வென்றுள்ளனர். ஐபிஎல் போட்டிகளை போலவே மற்ற நாடுகளிலும் டி-20 லீக் போட்டிகளை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் தான் தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் போட்டியை போலவே டி-20 லீக் போட்டிகளை நடத்த முடிவு செய்தனர். அதில் ஐபிஎல் போட்டிகளில் அணியை வைத்திருக்கும் நிர்வாகம் தான் தென்னாபிரிக்கா டி-20 போட்டியிலும் அணியை வாங்கியுள்ளனர். அதனால் ஐபிஎல் போலவே வரவேற்பை பெற்றுவிடுமா? என்று பல எதிர்பார்ப்பு காத்திருக்கின்றனர்.

சென்னை அணியின் நிர்வாகம் தான் ஜோகன்ஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என்ற அணியை கைப்பற்றியுள்ளனர். அதனால் தோனி தென்னாபிரிக்கா டி-20 லீக் போட்டிகளில் விளையாடுவாரா ? அல்லது ஆலோசகராக இருப்பாரா ? என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.

ஏனென்றால், ஐபிஎல் போட்டிகளில் எப்படி நான்கு வெளிநாட்டு வீரர்கள் அதிகபட்சமாக ப்ளேயிங் 11ல் இடம்பெறுவர்களோ, அதேபோல இந்திய வீரர்களும் தென்னாபிரிக்கா டி-20 லீக் போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா ? இல்லையா ? என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிசிசிஐ ஒரு சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் ” இந்தியாவில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் அனைத்து விதமான போட்டிகளில் இருந்து விலகும் வரை வேறு எந்த விதமான (தென்னாபிரிக்கா டி-20 லீக்) போட்டிகளிலும் விளையாட அனுமதியில்லை.”

“ஒருவேளை விளையாட வேண்டுமென்றால் பிசிசிஐ -ல் இருக்கும் ஒப்பந்தம் முடிந்துவிடும் என்று கூறியுள்ளனர்”. இருப்பினும் தோனி கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அதனால், அவர் விளையாடலாமா என்று கேள்விக்கு பதிலளித்த பிசிசிஐ உறுப்பினர்கள்.

அதில் “தோனி இன்னும் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் (சென்னை சூப்பர் கிங்ஸ்) போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கவில்லை. அதனால் அவரை வீரராக அல்லது ஆலோசகராக கூட நியமனம் செய்ய கூடாது. இங்கு முழுமையாக ஓய்வு பெற வேண்டுமென்று கூறியுள்ளனர்.”

ஒரு அணியை எப்படி வழிநடத்த வேண்டுமென்று தோனிக்கு நன்கு தெரியும். அவரது பேட்டிங்-கை விட அவரது வழிநடத்தும் திறன் தான் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணம் என்பதில் மாற்றமில்லை. சென்னை அணியில் இருந்து விலகிய பிறகு ஆலோசகராக அணியை வழிநடத்துவாரா தோனி ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img