ஐபிஎல் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் கடந்த 26ஆம் தேதி முதல் தொடங்கியது. இதுவரை 23 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.


ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்கு சற்று பின்னடைவு தான். ஏனென்றால் இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளில் தோல்வியை பெற்றுள்ளது. இதற்கு என்ன தான் காரணம் என்று யாராலும் சொல்ல முடியவில்லை.
அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 போட்டிகளில் தோனி சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரை தொடர்ந்து இப்பொழுது ஜடேஜா அணியை வழிநடத்தி வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு நடந்த போட்டியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 216 ரன்களை அடித்தது.


பின்பு 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி இறுதி வரை போராடி 193 ரன்களை அடித்தது. அதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றுள்ளது. இருப்பினும் சென்னை அணியின் பவுலிங் மிகவும் மோசமாக உள்ளது தான் உண்மை.
கடந்த ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் தீபக் சஹார் மற்றும் ஷர்டுல் தாகூர் போன்ற வீரர்கள் அணியில் விளையாடி வந்தனர். ஆனால் இந்த முறை ஷர்டுல் தாகூர் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இணைந்து விளையாடி வருகிறார்.


ஆனால் தீபக் சஹார் -க்கு என்ன ஆச்சு ? சில மாதங்களுக்கு முன்பு நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டது. அதனை அடுத்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐபிஎல் போட்டிகளில் பாதி போட்டிகளில் விளையாட வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியானது.
ஆனால் இப்பொழுது பெங்களூரில் உள்ள NCA அகாடமில் ஓய்வு எடுத்து வரும் நிலையில் பலமான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் மீதமுள்ள போட்டிகளில் நிச்சியமாக சென்னை அணியில் இடம்பெற போவதில்லை என்று உறுதியான தகவல் வெளியானது.


அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் தீபக் சஹாரை 14 கோடி ரூபாய் கொடுத்து சென்னை அணி கைப்பற்றியது. கடந்த சில மாதங்களாக தீபக் சஹார் ஆல் – ரவுண்டராக விளையாடி வருகிறார். ஒருவேளை தீபக் சஹார்-க்கு பதிலாக யாரை சென்னை அணி தேர்வு செய்தால் சரியாக இருக்கும் ?
உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!