இந்த ஆண்டு நிச்சியமாக சிஎஸ்கே அணி தான் கோப்பை வெல்லும்…! காரணம் இதோ ….!

14வது ஐபிஎல் போட்டி வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். உள்ளூர் விளையாட்டில் மிகவும் பிரபலமான போட்டி என்றாலே அது ஐபிஎல் போட்டிதான். 20 ஓவர் போட்டி என்பதில் அதில பல விறுவிறுப்பான நிகழ்ச்சிகள் பலர் இடம்பெறும்.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு ஒரு மோசமான சீசன் என்று கூட சொல்லலாம். ஏனென்றால், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு போன ஆண்டு மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது சிஎஸ்கே அணி.

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியின் தோல்வியால் ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் போக முடியவில்லை. அதுவே முதல் முறை ஐபிஎல் சீசனில் முதல் முறை ப்ளே -ஆஃப் போகாமல் வெளியேறுவது.

அதனால் நிச்சியமாக இந்த ஆண்டு கோப்பையை வெல்ல வேண்டும் என்று பயிற்சி செய்து வருகின்றனர். ஐபிஎல் 2021 ஏலத்தில் மெயின் அலி, கிருஷ்ணப்ப கவுதம் , ராபின் உத்தப்பா போன்ற வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிச்சியாளர் மைக்கேல் ஹசி சமீபத்தில் அளித்த பேட்டியில் : இந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு அருமையான அணி அமைந்துள்ளது. புதிதாக சிஎஸ்கே அணியில் இடம் பெற்ற ஆறு வீரர்களும் திறமையான வீரர்கள்.

மெயின் அலி மற்றும் கிருஷ்ணப்ப கவுதம் ஆகிய இருவரும் மிகச்சிறந்த ஆல் -ரவுண்டர்கள். அதுமட்டுமின்றி ராபின் உத்தப்பாவுக்கு அதிகம் அனுபவம் இருக்கிறது, அதனால் அவரால் அதிக ரன்களையும் அடிக்க முடியும் என்று கூறியுள்ளார் ஹசி.

இதனையெல்லாம் பார்க்கும்போது சிஎஸ்கே அணியிடம் மிகவும் சரியான அணி உள்ளது என்று ஹசி கூறியுள்ளார். அதுமட்டுமின்றி மும்பை மைதானம் பொறுத்தவரை பேட்ஸ்மேன் மற்றும் பவுலர் ஆகிய இருவருக்கும் அது சிறந்த மைதானம் என்று தான் சொல்ல வேண்டும்.

முதல் சில போட்டிகளில் வெற்றி பெற்றால் அதனப்பினர் வரும் போட்டிகளில் அவசரம் இல்லாமல் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்ய முடியும். அப்படி இல்லை என்றல் டென்ஷன் ஆக தான் போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் போட்டி வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது.