ரசிகர்கள் எதிர்பார்க்கும் படி இன்னும் இரண்டு நாட்களில் ஐபிஎல் தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். உள்ளூர் போட்டிகளில் ஐபிஎல் போட்டிதான் மிகப்பெரிய போட்டியாகும்.
இந்த ஆண்டு ஐபிஎல் 2021, வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் மே 30 தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர். 2008ஆம் ஆரம்பித்த இந்த ஐபிஎல் போட்டி ரசிகர்கள் ஆதரவை பெற்று சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் போட்டிகளில் மிகவும் பிரபலமான மற்றும் அதிக வெற்றிகளை கைப்பற்றிய அணி என்றல் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான்.ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 சரியான தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ளது சிஎஸ்கே.
அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே வீர்ரகளும் சோகத்தில் மூழ்கினார். அதற்கு முக்கியமான கரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை நடந்த எல்லா ஆண்டுகளும் ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
ஆனால் கடந்த ஆண்டு தான் சிஎஸ்கே அணியின் பல மோசமான தோல்வியால் அந்த ப்ளே -ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தவறவிட்டது சிஎஸ்கே. இந்த ஆண்டு 2021 நிச்சியமாக காம்பேக் தரவேண்டும் என்று நினைத்த சிஎஸ்கே அணி கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து பயிற்சி செய்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி கூடுதல் பலமாக சிஎஸ்கே அணியில் புதிதாக மெயின் அலி, கிருஷ்ணப்ப கவுதம், ராபின் உத்தப்பா, ஹரி ஷங்கர் ரெட்டி போன்ற வீரர்கள் ஏலத்தில் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதனால் இந்த ஆண்டு மீண்டும் காம்பேக் தரும் என்று ரசிகர்கள் ஏஹ்திர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
அது ஒருபக்கம் இருக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு காத்திருக்கும் இரு புதிய குழப்பம்….! முதல் ஒன்று சிஎஸ்கே அணியை விட்டு வெளியேறிய ஜோஷ் ஹேசல்வுட். அதனால் அவர் இடத்தில யார் வருவார்?? ஏனென்றால் அந்த இடத்தில் புதிதாக இரு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தும், அவர்கள் இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் அவர்கள் அதனை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.
இதற்கு பேட்டி அளித்த சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ.காசி விஸ்வநாதன் அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் போதுமான வீரர்கள் உள்ளனர். அதனால் ஜோஷ் ஹேசல்வுட்டுக்கு பதிலாக இன்னொரு வீரர் வருவதில் சிக்கல் இருந்தாலும் தேவை மிகவும் குறைவுதான் என்று கூறியுள்ளார்.
இரண்டாவதாக யார் வைஸ் கேப்டன் என்ற எழுந்துள்ளது. 2008அம ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை ரெய்னா தான் சிஎஸ்கே அணியின் கேப்டன் ஆனால் கடந்த ஆண்டு அவரது தனிப்பட்ட காரணத்தால் அவர் இந்தியா திரும்பிவிட்டார்.
அதனால் அவருக்கு பதிலாக வைஸ் கேப்டனாக ஜடேஜா இருந்துள்ளர். ஆனால் இப்பொழுது மீண்டும் ரெய்னா இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் சிஎஸ்கே அணியில் இருப்பதால் ரெய்னா தான் வைஸ் கேப்டனா?? என்று கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு பதிலளித்த சிஎஸ்கே நிர்வாகம் ; அதனை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் நிச்சியமாக புதிய வீரர்தான் வைஸ் கேப்டனாக இருப்பர் என்று கூறியுள்ளனர். இதுவும் இப்பொழுது அவ்வளவு ஒன்றும் முக்கியம் இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் கூறியுள்ளனர்.