ஏலத்தில் சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணிய இடம்பெறமால் போனதற்கு இதுதான் காரணம் ; சிஎஸ்கே உரிமையாளர் ஓபன் டாக் ;

கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஐபிஎல் டி20 2022 போட்டிக்கான ஏலம் மிகப்பெரிய அளவில் பெங்களுரில் நடைபெற்று நடந்து முடிந்துள்ளது.

ஐபிஎல் 2022 யில் லக்னோ மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் புதிய அணிகளை தவரித்து மிதமுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக தலா நான்கு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என்று பிசிசிஐ கூறியது. அதன்படி தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ.

இந்த முறை ஏலத்தில் இடம்பெற்ற சுரேஷ் ரெய்னா நிச்சியமாக மீண்டும் சென்னை அணியே அவரை கைப்பற்றும் என்று பலர் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. ஆமாம்..! சுரேஷ் ரெய்னா கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் பேசிய அளவில் ரன்களை அடிக்கவில்லை. பின்னர், அவருக்கு முதகில் காயம் ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு பதிலாக ராபின் உத்தப்பா இடம்பெற்றார்.

சுரேஷ் ரெய்னாவை காட்டிலும் ராபின் உத்தப்பாவின் விளையாட்டு அருமையாக இருந்தது. அதனால் இறுதியில் போட்டி வரை சிறப்பாக விளையாடி வந்துள்ளார் ராபின். பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் மகேந்திர சிங் தோனி போன்ற நான்கு வீரர்களை மட்டுமே கைப்பற்றியது சென்னை.

அதில் சுரேஷ் ரெய்னா இல்லாத காரணத்தால் சிஎஸ்கே ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. சரி ஏலத்தில் நிச்சியமாக சென்னை அணியில் இல்லையென்றாலும் நிச்சியமாக வேறு ஏதாவது அணியில் இடம்பெருவார் என்று பல கருத்துக்கள் எழுந்தன. ஐபிஎல் டி20 2022 ஏலத்தில் சென்னை அணியிடம் 3.47 கோடி மீதமுள்ள நிலையில் சுரேஷ் ரெய்னாவை கைப்பற்றும் என்று நினைத்தால் ஏமாற்றமாக மிஞ்சியது.

இதனை பற்றி பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உறுப்பினரான காசி விஸ்வநாதன் கொடுத்த பேட்டியில் ; சுரேஷ் ரெய்னா ஒரு மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்று பலருக்கும் தெரியும். அதுவும் கடந்த 12 ஆண்டுகள் சிறப்பாக விளையாடி வந்துள்ளார் சுரேஷ் ரெய்னா. ஆனால் இந்த முறை சுரேஷ் ரெய்னாவை கைப்பற்ற முடியாதது அதிர்ச்சியாக தான் இருக்கிறது.

அதுமட்டுமின்றி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் வீரர்களை பற்றியும், இன்னும் புரிந்து கொள்ள வேண்டும் . அதுமட்டுமின்றி மற்ற அணிகளில் அவரது தேவை இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் யாரும் கைப்பற்றவில்லை என்பது அதிர்ச்சியாக தான் இருந்தது என்று காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.