இந்த வீசியதில் தோனி தான் எப்பையுமே கிங் , தோனிக்கு நிகர் யாருமே இல்லை ; முன்னாள் இந்திய வீரர் பார்திவ் பட்டேல் கருத்து…!

ஐபிஎல் 2021 : கடந்த மாதம் ஏப்ரல் 9ஆம் தேதி ஆரம்பித்த ஐபிஎல் 2021 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக ஐபிஎல் வீரர்கள் சிலருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் போட்டிகளை ரத்து செய்தது பிசிசிஐ.

யாருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டது ?

மே 4 ஆம் தேதி அன்று நடக்கவேண்டிய போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஈயின் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத இருந்தன. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சில வீரர்களுக்கு நிலை சரியில்லை.

அதனால் உடனடியாக அனைத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் அனைத்து அணிகளில் இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3 பேருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் தலா ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் உடனடியாக ஐபிஎல் 2021 போட்டிகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது பிசிசிஐ.

மீதமுள்ள போட்டிகள் எப்பொழுது நடைபெறும் ?

சமீபத்தில் கங்குலி அளித்த பேட்டியில் ; மொத்தம் 60 போட்டிகளில் வெறும் 29போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் ஐபிஎல் 2021யை தற்காலிகமாக ரத்து செய்தது பிசிசிஐ. மீதமுள்ள போட்டிகள் செப்டெம்பர் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்க படுகிறது.

தோனி எப்பையுமே மாஸ் தான், அதில் எந்த சந்தேகமும் இல்லை ; முன்னாள் இந்திய அணியின் வீரர் பார்திவ் பட்டேல் கூறியுள்ளார் :

கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிலையில் இருந்தது. அதுதான் முதல்முறை சென்னை சூப்பர் கிங்ஸ் ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் போகாமல் வெளியேறியது. ஐபிஎல் ஆரம்பித்த 2008ஆம் ஆண்டில் இருந்து இப்பொழுது வரை மகேந்திர சிங் தோனி தான் கேப்டனாக இருக்கிறார்.

இதுவரை மூன்று கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த ஆண்டு மோசமாகத்தான் இருந்தது. ஆனால் அதனை சரி செய்ய இந்த ஆண்டு சிறப்பான முறையில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்த மாதிரி கம்பேக் காமிக்க நிச்சியமாக சிறந்த கேப்டன் தேவை படுகின்றனர். எனக்கு முன்பே நன்கு தெரியும் நிச்சியமாக ஐபிஎல் 2021 போட்டியில் சிஎஸ்கே அணி முதல் நான்கு இடத்தில் இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்திவ் பட்டேல்.