சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற போகின்ற தமிழக வீரர்…! அப்போ.. பினிஷார் தயார் ; முழு விவரம் இதோ ;

0

ஐபிஎல் 2021 போட்டிகள் முடிந்து மூன்று மாதங்கள் கூட முழுமையாக முடியவில்லை. ஆனால் ஐபிஎல் 2022 போட்டிக்கான பேச்சுவார்த்தை சுடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அதற்கு முக்கியமான காரணம் ஐபிஎல் 2022யில் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ.

அதனால் மிகப்பெரிய அளவில் ஏலம் நடத்த போவதாகவும், ஏலம் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ. அதனால் புதிய இரு அணிகளை தவிர்த்து மீதமுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. நவம்பர் இறுதியில் தான் தக்கவைத்த பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

ஐபிஎல் போட்டிகளில் அதிக வெற்றிகளை கைப்பற்றிய அணிகளில் ஒன்று தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதனை கடந்த 2008ஆம் ஆண்டு அதாவது ஐபிஎல் அறிமுகம் ஆன காலத்தில் இருந்தே மகேந்திர சிங் தோனி தான் இதனை தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார். இதுவரை மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டிக்கு மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற நான்கு வீரர்களை தக்கவைத்துள்ளனர். இப்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யார் யார் தக்கவைக்க போகிறார் என்று பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

ஆனால் பினிஷார் ஆக இவரை ஏலத்தில் கைப்பற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திட்டம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் பினிஷார் ஆக விளையாடி வந்துள்ளார் ஷாருக்கான். ஆனால் அவரை பஞ்சாப் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்படவில்லை.

இப்பொழுது விஜய் ஹசாரே கோப்பை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தான் கர்நாடக மற்றும் தமிழ்நாடு ஆகிய அணிகள் மோதின. அதில் ஷாருகான் 39 பந்தில் 79 ரன்களை விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இப்பொழுது மகேந்திர சிங் தோனி 4வது இடத்தில் பேட்டிங் செய்து வருகிறார். அதனால் நிச்சியமாக இவர் அணியில் இருந்தால் சிறப்பான பினிஷார் ஆக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2021யில் 11 போட்டிகளில் விளையாடி 153 ரன்களை அடித்துள்ளார். அதிலும் அதிகபட்சமாக 47 ரன்களை அடித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்க அணிக்கு இன்னும் 48 கோடிகள் மீதமுள்ள நிலையில் யார் யாரை கைப்பற்ற போகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்……!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here