போடற வெடிய …! மும்பை இந்தியன்ஸ் வீரர்களை குறிவைத்த சிஎஸ்கே அணி…! பட்டைய கிளப்ப போறாங்க…!!

0

ஐபிஎல் டி-20 2022 போட்டிக்கான பேச்சுகள் தொடங்க ஆரம்பித்துள்ளது. ஆமாம் ..! பிப்ரவரி 12,13ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது மெகா ஏலம்.

அதற்கு முக்கியமான காரணம், ஐபிஎல் டி20 லீக் போட்டியில் லக்னோ மற்றும் அகமதாபாத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் மீதமுள்ள 8 அணிகளையும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம் என்று பிசிசிஐ அறிவித்தது. பின்னர் புதிய இரு அணிகளையும் அதிகபட்சமாக மூன்று வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம் என்று பிசிசிஐ கூறியது.

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க போகும் வீரர்கள் யார் யார் அணியில் இடம்பெற போகிறார்கள் என்று கேள்விகள் எழுகின்றன. அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யார் யார் இடம்பெற போகிறார்கள் ?? என்ற ஆர்வம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இருந்தும் சில முக்கியமான வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் குறிவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் வீரராக ட்ரெண்ட் பெல்ட் ; ஆமாம்…! கடந்த ஆண்டு ஐபிஎல் டி20 லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வந்துள்ளார். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை தக்கவைக்கப்படவில்லை. ஒருவேளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை கைப்பற்றினால் சிறப்பான டெத் பவுலர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பவுலர்கள் யாரும் இடம்பெறாத காரணத்தால் ட்ரெண்ட் பெல்ட் சிறந்த ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரண்டாவது , இஷான் கிஷான் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை விளையாடிய இஷான் கிஷான் மும்பை இந்தியன்ஸ் அணியில் தக்கவைக்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த ஆண்டு மிடில் ஆர்டர் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதில் இஷான் கிஷான் இடம்பெற்றால் சிறப்பான மிடில் ஆர்டர் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் 10 போட்டிகளில் விளையாடி 241 ரன்களை அடித்துள்ளார். அதுமட்டுமின்றி தோனிக்கு பிறகு விக்கெட் கீப்பராக கூட அமைய வாய்ப்புகள் உள்ளன.

ராகுல் சஹார் சிறந்த சுழல் பந்து வீச்சாளராக இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, சிஎஸ்கே அணியில் மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா போன்ற சுழல் பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் ராகுல் சஹாரின் பந்து வீச்சு நிச்சியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உபயோகமாக இருக்கும். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை டி20 லீக் போட்டியில் இந்திய அணியின் இடம்பெற்றுள்ளார் ராகுல் சஹார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here