சிஎஸ்கே வீரருக்கு காயம், அதனால் ஐபிஎல் 2022 போட்டிகளில் இருந்து விலக போகிறார் ; என்ன செய்ய போகிறது சிஎஸ்கே ?

வருகின்ற மார்ச் 26ஆம் தேதி முதல் ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர். இதுவரை, 14 சீசன் ஐபிஎல் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதுவும் இந்த முறை லக்னோ மற்றும் குஜராத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ.

அதனால் மிகப்பெரிய அளவில் ஏலம் கடந்த மாதம் நடத்தப்பட்டது. ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒரு சில வீரர்கள் அதிக விலை கொடுத்து ஏலத்தில் கைப்பற்றுவது வழக்கம் தான். அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 கோடி விலை கொடுத்து தீபக் சஹாரை கைப்பற்றினர்.

அவர் சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய அளவில் அவரது விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக சென்னை அணியின் முக்கியமான பவுலராகவும் களமிறங்கி விளையாடி வருகிறார். அதனால் எப்படியாவது அவரை கைப்பற்ற வேண்டும் என்று உறுதியாக சென்னை அணி அவரை கைப்பற்றியது.

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி விளையாடி தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டது. அதனால் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாட போவதாக பிசிசிஐ அறிவித்த பிறகு இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்து வெளியேறியுள்ளார் தீபக்.

சமீபத்தில் வெளியான தகவலின் படி தீபக் சஹாருக்கு காயம் பெரிய அளவில் உள்ளதாக பல தகவல் வெளியாகியுள்ளது. அதனால் ஐபிஎல் டி-20 போட்டிகளில் தீபக் முதல் சில போட்டிகளில் நிச்சியமாக விளையாட போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. என்ன செய்ய போகிறது சென்னை ?

ஒருவேளை தீபக் சஹாருக்கு பதிலாக மாற்று வீரர் யாராவது இடம்பெற அதிக வாய்ப்பு இருக்குமோ ?? 14 கோடி கொடுத்து வாங்கிய தீபக் சஹாருக்கு இப்படியா ? என்ற சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஆனால் நிச்சியமாகதோனி மற்றும் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெம்மிங் என்ன செய்ய போகிறார்கள் என்ற கேள்வி தான் எழுந்துள்ளது.

நீங்க சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகரா ? அப்போ நீங்க சொல்லுங்க யார் இந்த முறை தீபக் சஹாருக்கு பதிலாக அணியில் இடம்பெற வேண்டுமென்று நீங்க விரும்புகிறீர்கள் ? உங்கள் கருத்தை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்…!