Advertisement
HomeTrending Newsஉலக சாதனை படைத்த CSK வீரர் ; BCCI -ன் பார்வை இவர் மேல் தான்...

உலக சாதனை படைத்த CSK வீரர் ; BCCI -ன் பார்வை இவர் மேல் தான் ; இனி கே.எல்.ராகுல், ரோஹித் ஷர்மாவிற்கு சிரமம் தான் ;

இந்திய கிரிக்கெட் அணி : திறமையான வீரர்களுக்கு அவ்வப்போது இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட தொடர்ந்து வாய்ப்பு கிடைத்து கொண்டே தான் வருகிறது. இந்தியாவில் நடைபெறும் ரஞ்சி கோப்பை, சையத் முஸ்தாக் அலி, ஐபிஎல் போன்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலே போதும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுவிடலாம்.

ருதுராஜ் கெய்க்வாட் :

இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் 2020 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராக அறிமுகம் ஆனார். அப்பொழுது அவரது ஆட்டம் பேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் ஐபிஎல் 2021 போட்டிக்கான தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர்களில் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் ருதுராஜ் கெய்க்வாட். அதனால் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

திறமை இருந்தும் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது ஏன் ?

ஐபிஎல் போட்டிகள் மட்டுமின்றி ரஞ்சி கோப்பை, சையத் முஸ்தாக் அலி மற்றும் விஜய் ஹசாரே போன்ற போட்டிகளிலும் கடந்த ஆண்டு இவர் தான் அதிக ரன்களை அடித்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டத என்று கேட்டால் இல்லை என்பது பதில். ஆமாம், ருதுராஜ் கெய்க்வாட் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்காக முதல் முதலில் விளையாடினார்.

இதுவரை மொத்தம் இந்திய அணிக்காக 9 டி-20 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். இந்திய அணியில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷாப் பண்ட் , ஷிகர் தவான், சுப்மன் கில் போன்ற வீரர்கள் தொடக்க வீரராக விளையாடி வருவதால் இவருக்கு (ருதுராஜ்) வாய்ப்பு மறுக்கப்படுகிறதா ?

உலகக்கோப்பை போட்டியில் தான் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரின் பார்ட்னெர்ஷிப் பற்றி நன்கு புரிந்தது. அதனால் இனிவரும் போட்டிகளில் இஷான் கிஷான், ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்களுக்கு தொடக்க வீரராக விளையாட வாய்ப்பு கொடுத்தால் நிச்சியமாக சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் ருதுராஜ் கெய்க்வாட் செய்த புதிய சாதனை :

2022 ஆம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே கோப்பை (ஒருநாள்) கடந்த நவம்பர் 12ஆம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான மகாராஷ்டிரா அணியும், கரண் சர்மா தலைமையிலான உத்தரபிரதேச அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற உத்தரபிரதேசம் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய மஹாராட்ஸ்ரா அணிக்கு கேப்டன் சிறப்பான தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தினார் (ருதுராஜ்). அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 330 ரன்களை அடித்தனர். அதில் ருதுராஜ் கெய்க்வாட் தான் அதிகபட்சமாக 220 ரன்களை* விளாசியுள்ளர்.

பின்பு 331 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உத்தரபிரதேச அணியால் 272 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் 58 ரன்கள் வித்தியாசத்தில் ரூட்டுராஜ் தலைமையிலான மகாராஷ்டிரா அணி வென்றுள்ளது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரே ஓவரில் 7 சிக்ஸர் தொடர்ந்து அடித்து சாதனை படைத்துள்ளார்.

ஆமாம், சரியாக 49வது ஓவரில் ஷிவா சிங் பவுலிங் செய்ததை எதிர்கொண்டார் ருதுராஜ். முதல் பந்தில் இருந்துஆறாவது பந்து வரை சிக்ஸரை அடித்து விளாசினார். இதில் இடையே ஒரு நோ-பால் அதிலும் சிக்ஸர் அடித்ததால் மொத்தம் 7 சிக்ஸர் அடித்த பெருமையை பெற்றுள்ளார் ருதுராஜ் கெய்க்வாட். இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டியில் இவரது விளையாட்டு அருமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular