CSK வீரருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது…அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள்..! ஐபிஎல் 2021 போட்டிகள் நடக்குமா?

ஐபிஎல் 2021, போட்டிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். இதுவரை ஐபிஎல் 2021, தொடரில் 29 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் மிகவும் சிறப்பான முறையிலும், பாதுகாப்பான முறையிலும் நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்ததால், இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில், ஏப்ரல் மாதத்தில் நடக்க வேண்டிய ஐபிஎல் போட்டி சற்று தாமதம் ஆகி செப்டம்பர் மாதத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு பல பாதுகாப்புடன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இன்று நடக்க வேண்டிய ஐபிஎல் 2021 தொடரின் 30வது போட்டியை மற்ற தேதியில் மாற்றுயுள்ளனர். அதற்கு முக்கியமான காரணம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இரு வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் வருண் சக்கரவத்தியும் மற்றும் சந்தீப் வாரியர் அடங்கும்.

அதனால் மீதமுள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி அனைத்து வீரர்களுக்கும் அனைத்து அணிகளும் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் சென்னை சூப்பர் அணியில் உள்ள மூன்று நபருக்கு கொரோனா சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பஸ் டிரைவர், கிளீனர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் CEO காசி விஸ்வநாதனும் அதில் அடங்கும். அதனால் சூப்பர் கிங்ஸ் வீரர்களும் தனிமைப்படுத்தபட்டு காரோண பரிசோதனையை மேற்கொள்ளப்பட்டது.

அதில் அனைவருக்கும் கொரோனா நெகடிவ் என்று வந்தாலும், மீண்டும் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. அதனால் போட்டிகள் நடக்குமா இல்லையா என்று கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.