HomeIPLவீடியோ ; செம Catch , கிட்டத்தட்ட Superman போல பறந்து பிடித்தார் அம்பதி ராயுடு...

வீடியோ ; செம Catch , கிட்டத்தட்ட Superman போல பறந்து பிடித்தார் அம்பதி ராயுடு ; வீடியோ வைரல்

மும்பையில் உள்ள பட்டில் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இதுவரை மொத்தம் 28 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

அதில் பெங்களூர் அணி 9 போட்டிகளிலும், சென்னை அணி 18 போட்டிகளிலும் வென்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டூப்ளஸிஸ் டாஸ் வென்று வழக்கம்போல பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

தொடக்க வீரரான ருதுராஜ் வழக்கம் போல பெரிய அளவில் விளையாடாமல் ஆட்டம் இழந்தார். பின்பு ஆல் – ரவுண்டர் மொயின் அலி ரன் அவுட் ஆனதால் சென்னை அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் துபே மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் சென்னை அணிக்கு ரன்கள் குவிந்தன.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த சென்னை அணி 216 ரன்களை அடித்தது. அதில் ருதுராஜ் 17, உத்தப்பா 88, மொயின் அலி 3, ஷிவம் துபே 95 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெங்களூர் அணி.

தொடக்கத்தில் சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. சரியான பார்ட்னெர்ஷிப் அமையாத காரணத்தால் பெங்களூர் அணி இறுதி வரை போராடி தோல்வியை பெற்றது. அதில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 193 ரன்களை அடித்த பெங்களூர் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

இதற்கிடையில் பெங்களூர் அணி அவ்வப்போது அதிரடியாக விளையாடி கொண்டு வந்த நிலையில் 16வது ஓவரை ரவீந்திர ஜடேஜா பவுலிங் செய்தார். அதனை பெங்களூர் அணியை சேர்ந்த ஆகாஷ் தீப் எதிர்கொண்டார். அப்பொழுது எதிர்பாராத விதமாக பேட்டில் பட்ட பந்தை ராயுடு தாவி பிடித்த வீடியோ இப்பொழுது வைரலானது.

போட்டியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2022யில் முதல் வெற்றியை கைப்பற்றியுள்ளது. இனிவரும் போட்டிகளில் நிச்சியமாக சென்னை அணிக்கு நல்ல ஒரு நம்பிக்கையுடன் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளனர். இந்த முறை சென்னை அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img