இதனை செய்ய தவறினால் நிச்சியமாக சிஎஸ்கே அணிக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு குறைவுதான் ; மைக்கல் வாகன் ..ஒருவேளை உண்மையாக இருக்குமோ??

இந்தியாவில் சமீபத்தில் ஆரம்பித்த ஐபிஎல் 2021, சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. அதனால் இன்னும் இரு மாதங்களுக்கு நல்ல விறுவிறுப்பான போட்டியை எதிர்பார்க்கலாம். 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் போட்டி ரசிகர்களின் ஆதரவை பெற்று சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான தோல்விகளை பல போட்டிகளில் சந்தித்துள்ளது. அதனால் சென்னை அணியால் ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் நுழையாமல் வெளியேறியது. அதுவே முதல்முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே – ஆஃப்-க்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

அதனால் இந்த ஆண்டு நிச்சியமாக கம் பேக் கொடுக்க வேண்டும் என்ற முடிவில் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து பயிற்சி செய்து வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஐபிஎல் 2021 ஏலத்தில் பல பல முக்கியமான வீரர்களையும் வாங்கியுள்ளது சிஎஸ்கே அணி.

அதில் ராபின் உத்தப்பா, மெயின் அலி, கிருஷ்ணப்ப கவுதம், ஹரி ஷங்கர் ரெட்டி போன்ற வீரர்கள் அதில் உள்ளடங்கும். இரு நாட்களுக்கு முன்பு நடந்த போட்டியில் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 188 ரன்களை எடுத்துள்ளது. 188 என்பது நல்ல ஒரு ரன்கள் தான் அதில் மாற்றம் இல்லை.

ஆனால் இருந்தாலும் டெல்லி கேபிட்டல்ஸ் அணி அதனை சுலபமாக அடித்துவிட்டது. 18.4 ஓவர் முடிவில் 190 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதனால் சிஎஸ்கே அணி புள்ளிபட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது.

இந்த போட்டிக்கு கருத்து கூறிய முன்னாள் இங்கிலாந்து அணியின் வீரர் மைக்கல் வாகன் ; சென்னை சூப்பர் கிங்ஸ் நல்ல ரன்களை தான் அடித்துள்ளனர். அதிலும் சுரேஷ் ரெய்னாவின் ஆட்டத்தை பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நீண்ட நாட்கள் கழித்து அதிரடியான ஆட்டத்தை ஆடியுள்ளார்.

எனக்கு சுரேஷ் ரெய்னாவை பார்க்கும்போது 6 வருடங்களுக்கு பின் பார்த்த ரெய்னாவாக தான் தெரிகிறார். அதுமட்டுமின்றி சிஎஸ்கே அணியை நிச்சியமாக மறு பரிசீலனை செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் நிச்சியமாக இந்த ஆண்டு சென்னசி சூப்பர் கிங்ஸ் அணி பல தோல்விகளை சந்திக்க நேரிடும் என்பதில் சந்தேகம் இல்லை என்று கூறியுள்ளார் மைக்கல் வாகன்.