ஐபிஎல் 2023 : கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் தொடங்கிய ஐபிஎல் டி-20 லீக் போட்டிக்கான தொடரின் லீக் தொடர் நாளை இரவுடன் முடிவுக்கு வர போகிறது. அதனை தொடர்ந்து ப்ளே – ஆஃப் சுற்றுகள் நடைபெற இருக்கிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.


புள்ளிபட்டியலில் விவரம் :
- குஜராத் டைட்டன்ஸ் – 18 புள்ளிகள்
- சென்னை சூப்பர் கிங்ஸ் – 15 புள்ளிகள்
- லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் – 15 புள்ளிகள்
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – 14 புள்ளிகள்
- ராஜஸ்தான் ராயல்ஸ் – 14 புள்ளிகள்
- மும்பை இந்தியன்ஸ் – 14 புள்ளிகள்
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 12 புள்ளிகள்
- பஞ்சாப் கிங்ஸ் – 12 புள்ளிகள்
- டெல்லி கேபிட்டல்ஸ் – 10 புள்ளிகள்
- சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் – 8 புள்ளிகள்
இதில் குஜராத் அணி மட்டுமே ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மற்ற மூன்று இடங்களுக்கு மும்பை, பெங்களூர், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ, ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவு வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :


கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆன தினத்தில் இருந்து சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார் மகேந்திர சிங் தோனி. இதுவரை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் நான்கு முறை கோப்பையை வென்றுள்ளனர்.
அப்படி இருக்கும் சென்னை அணி இன்று மதியம் 3:30 மணியளவில் நடைபெற உள்ள போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளனர். அதில் வெற்றிபெற்றால் சென்னை அணி நிச்சியமாக ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும். இந்த ஆண்டு சென்னை அணியின் பலமாக மாறியுள்ளது பேட்டிங் மற்றும் பவுலிங்.
அதிலும் குறிப்பாக இளம் வீரர்களை உருவாக்கி வருகிறது சென்னை அணி. ஆமாம், ருதுராஜ் , மதீஷா பத்திரான, தீக்ஷனா, ஆகாஷ் சிங் போன்ற வீரர்களின் சிறப்பாக பங்களிப்பு சென்னை அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக மாறியுள்ளது. ஆனால் ஐபிஎல் 2023 ஏலத்தில் சென்னை அணி கைப்பற்றிய மிகப்பெரிய வீரர் ஓய்வு எடுத்து கொண்டு வருகிறார்.


ஆமாம், இங்கிலாந்து அணியின் ஆல் – ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ்-ஐ 16.25 கோடி விலை கொடுத்து அனைத்து அணிகளிடமும் போட்டி போட்டு கொண்டு சென்னை அணி கைப்பற்றியது. ஆனால் ஒரு பலனும் கிடையாது. வெறும் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.
இனிவரும் ஐபிஎல் தொடரில் அனுபவம் மற்றும் திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் வலுவான அணியாக சென்னை அணி மாற அதிக வாய்ப்புகள் இருக்கிறது. முன்னணி வீரர்களை காட்டிலும் இளம் வீரர்களை அணியில் தேர்வு செய்ய வேண்டுமென்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.