மாஸ்டர் பிளான் செய்த CSK ; முகேஷ் சௌத்ரிக்கு பதில் மாற்று வீரரை அறிவித்தது CSK நிர்வாகம்!

0

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாளை (மார்ச் 31) மாலை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

அதைத் தொடர்ந்து, அன்றைய தினம் இரவு நடைபெறும் முதல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இதனால் அனைத்து அணிகளின் வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இருந்து முன்னணி வீரர்கள் விலகி வருகின்றனர்.

இதனால் மாற்று வீரர்களைத் தேர்வு செய்வதில் அணி நிர்வாகங்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 26 வயதான முகேஷ் சௌத்ரி இடம் பிடித்துள்ளார்.

இவர் கடந்த 2022- ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடிய முகேஷ் சௌத்ரி, 13 ஆட்டங்களில் பங்கேற்று 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த நிலையில், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் இருந்த முகேஷ் சௌத்ரியின் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அங்கேயே தங்கி அவர் சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல் கூறுகின்றனர். காயம் காரணமாக, முகேஷ் சவுத்ரி நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில், முகேஷ் சவுத்ரிக்கு பதில் ஆகாஷ் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவார் என்று ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முகேஷ் சவுத்ரிக்கு பதிலாக ஆகாஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அறிமுகமாகி 16 விக்கெட்டுகளை வீழ்த்திய முகேஷ் சவுத்ரி, காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். எனவே, 2020- ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி சார்பில் ஆகாஷ் சிங் இடம் பிடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here