அடிமேல் அடி வாங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ; முக்கியமான மூன்று வீரர்களுக்கு காயம் ; அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள் ;

0

ஐபிஎல் 2023 : இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2023 போட்டிகள் கடந்த மாதம் மார்ச் 31ஆம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 23 போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

இன்று இரவு 7:30 மணியளவில் தொடங்க உள்ள போட்டியில் டூப்ளஸிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளனர். இதுவரை 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் சென்னை அணி அதிகபட்சமாக 20 போட்டிகளிலும் பெங்களூர் அணி 10 போட்டிகளிலும் வென்றுள்ளனர்.

அதனால், இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். இருப்பினும் சென்னை அணிக்கு மோசமான நிலைக்கு உருவாகியுள்ளது. ஆமாம், முக்கியமான மூன்று வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதனால், இனிவரும் போட்டிகளில் சென்னை அணி வெல்ல வாய்ப்பு குறைவாக இருக்கிறது போல தெரிகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 2 போட்டியில் வென்று 5வது இடத்தில் இருக்கிறது சென்னை அணி. சென்னை அணிக்கு இந்த ஆண்டு பலமான பேட்டிங் லைன் அமைந்துள்ளது. அதிலும் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி வருவது சென்னை அணிக்கு கூடுதல் பலம் தான்.

இருப்பினும் சென்னை அணியில் முக்கியமான வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது :

சென்னை அணியின் முன்னணி வீரரான தீபக் சஹார், பென் ஸ்டோக்ஸ் மற்றும் சிசண்ட மகளா போன்ற வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் மூன்று வீரர்கள் சென்னை அணியின் ப்ளேயிங் 11- சிறப்பாக விளையாடி வருகின்றனர். இவர்கள் இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவாக தான் இருக்கும்.

அதுமட்டுமின்றி, தீபக் சஹார் மற்றும் சிசண்ட மகளா இன்னும் 2 வாரங்களில் எந்த விதமான போட்டிகளிலும் விளையாட போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மாற்று வீரரை சரியாக தேர்வு செய்வாரா தோனி ? ஏனென்றால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பிறகு தோனி ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

அதனால், கோப்பையை வென்ற கையுடன் சென்றால் சென்னை ரசிகர்களுக்கு அதி பெருமையாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதுவரை நான்கு முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு வென்று ஐந்தாவது கோப்பையை வெல்லுமா ? இல்லையா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here