இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். அதுமட்டுமின்றி ஐபிஎல் வீரர்கள் அனைவரும் அவரவர் அணியில் இணைந்து தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு ஐபிஎல் 2021 முதல் சில போட்டிகளில் ரசிகர்கள் யாரும் மைதானத்துக்கு சென்று பார்க்க அனுமதி இல்லை என்று பிசிசிஐ கூறியுள்ளது. அதுமட்டுமின்றி எந்த அணிக்கும் அவரவர் ஹாம் மைதானத்தில் விளையாட வாய்ப்பு இல்லை என்றும் பிசிசிஐ கூறியுள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது. அதில் மறக்க முடியாது ஒன்று சிஎஸ்கே அணியின் மோசமான தோல்வி தான். ஏனென்றால் எந்த ஆண்டும் இல்லாதது போல் கடந்த ஆண்டு பல போட்டிகளில் மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது.
இதுவரை நடந்து முடிந்த 13ஆண்டுகளில் கடந்த ஆண்டு தன சிஎஸ்கே அணியால் ப்ளே -ஆஃப் சுற்றுக்குள் நுழையாமல் வெளியேறியது.அதனால் சிஎஸ்கே வேறறகள் கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து வேறறகள் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது. நிச்சியமாக இந்த ஆண்டு கோப்பையை வென்றே ஆகா வேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் மற்றும் நியூஸிலாந்து அணியின் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஆண்டு ஐபிஎல் 2021 ஆம் ஐபிஎல் போட்டியின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளார்.
அதில் முதல் இடத்தில, அதாவது கோப்பையை இந்த ஆண்டும் மும்பை இண்டியன்ஸ் அணிதான் வெல்லும் என்று கூறியுள்ளார். இரண்டாவது இடத்தில் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் , மூன்றாவது இடத்தில் பஞ்சாப் அணியும், நான்காவது இடத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத். ஐந்தாவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஆறாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஏழாவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் இறுதி இடத்தில் சென்னை சூப்பர் கின்ஸ்க் அணி இடம் பெரும் என்று கூறியுள்ளார்.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். நிச்சியமாக இந்த ஆண்டு சிஎஸ்கே அணி கோப்பையை வெல்லும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.